தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் வேண்டுகோள்!

Vinkmag ad
ஜனவரி 26, ஜனவரி 30
—————————-
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் வேண்டுகோள்!
———————————————
தேசத் தந்தை காந்தியடிகள் 1930 இல் பூரண விடுதலையைப் பிரகடனப்படுத்தி ஜனவரி 26 ஆம் தேதியை விடுதலை நாளாக அறிவித்தார். தேசத்தந்தை அறிவித்த ஜனவரி 26 ஆம் தேதி நமது நாட்டின் குடியரசு நாள் என இந்திய அரசு 1950 இல் அறிவித்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அளப்பரியது. அந்தத் தியாகத்தை நினைவுகூரும்வகையில் . ‘இந்தியா எங்கள் தாய்நாடு – இஸ்லாம் எங்கள் வழிபாடு’ என வாழும் முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் முன்புறமும், பொதுவிடங்களிலும் வழக்கம்போல் இந்த ஆண்டும் மிகப் பெரும் அளவில் தேசியக் கொடியை ஏற்றிடத் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சமுதாய மக்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறது.
  ‘இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து ஒன்றாக ஒற்றுமையாகச் சமாதானமாக வாழ வேண்டும்’ என்று கூறிய காரணத்திற்காகத் தேசத்தந்தை காந்தியடிகளைக் கோட்சே கொன்ற ஜனவரி 30 ஆம் தேதியை நினைவுகூரும்வகையில் அன்றைய தினம் ‘நேசம் வளர்ப்போம்- தேசம் காப்போம்’ என்ற தலைப்பில் அகில உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்வண்ணம் அமைதிப் பேரணிகள், மத நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்திடவும் சமுதாய மக்களைத் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறது.
-பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

News

Read Previous

மாய உலகம்: ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்…

Read Next

ஜெய்ஹிந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *