எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?

Vinkmag ad

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?
1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.
இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில்
சாப்பிடவேண்டும்.
2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து
சாப்பிடக்கூடாது. வாழைப்பழம்
சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும்.
சாப்பாட்டுடன் சேர்ந்து
சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன்
காய்கறிகளைச் சேர்த்துச்
சாப்பிடக்கூடாது.
5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.
அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு
உள்ளது.
6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.
7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு
உண்பது நல்லது.
8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,
முள்ளங்கி ஆகியவற்றைச்
சாப்பிடக்கூடாது.
9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு
ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.)நெய்யை வெண்கலப்
பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக்
குடிக்கலாம்.
12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய்,
ஊறுகாய் ஆகியவற்றைச்
சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச்
சேர்த்து கொள்ளக்கூடாது.
14.)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய்,
புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு,
அதிக காரம், அதிக புளிப்பு,
கொத்தவரங்காய், பீன்ஸ்
ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.)கோதுமையை நல்லெண்ணெயுடன்
சமைத்துச் சாப்பிடக்கூடாது.

News

Read Previous

கண்மாய் சீரமைப்புப் பணி ஆய்வு

Read Next

பொன்மொழிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *