உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு – 2021

Vinkmag ad
உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு – 2021
தமிழ்நாடு அரசு –  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
மெல்பர்ன் தமிழ்ச் சங்கம்- ஆஸ்திரேலியா
நற்றமிழ்ச் சங்கம் – இளங்காடு
தமிழ்த்தாய் அறக்கட்டளை – தஞ்சாவூர்
இணைந்து  நடத்துகிறது.
அறிவிப்பும்-அழைப்பும்….
26.02.2021-வெள்ளி
27.02.2021 சனி.
28.02.2021.ஞாயிறு
ஆகிய மூன்று நாட்களும்  சோழமண்டலத் தலைநகரம் தஞ்சாவூரில்
கோலாகலமாக நடைபெற உள்ளது.
முதலாவது உலகத் திருக்குறள் மாநாட்டை
மலேசியா, கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் 2019 – பிப்ரவரி 22,23,24 -இல் நடத்தினோம்.
இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டை
இலங்கை, யாழ்ப்பாணம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2020 பிப்ரவரி 21,22,23 -இல் நடத்தினோம்.
மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டை
2021. பிப்ரவரி 26, 27,28 -இல் தஞ்சாவூரில்
மூன்று நாட்களும் வெவ்வேறு தகுதி வாய்ந்த அரங்கத்தில் நடத்த இருக்கிறோம்.
சாதி, மதம், அரசியல் தவிர்த்து கல்வி சார்ந்த மாநாடாக
உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு தஞ்சாவூரில் வெகுசிறப்பாக, நடத்த முயற்சி எடுத்துவருகிறோம்.
ஏற்பாட்டாளர்களாகிய எங்களுக்கோ,
தனிப்பட்ட தமிழ்ச்சங்க அமைப்பிற்கோ இந்த திருக்குறள்  மாநாடு உரிமையானதல்ல.
முயற்சி எங்களுடையது.
அதை வெற்றி பெற வைப்பது
உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் , கடமையும் உரிமையும் ஆகும்.
தமிழ்நாடு அரசு சார்ந்த கல்வி நிறுவனம்,
பல்கலைக்கழகம், கல்லூரிகளுடன் இணைந்து
உலகத் தமிழர்களின் ஆதரவுடன்.
இந்த மாநாடு நடைபெற உள்ளது.
அயல்நாட்டிலிருந்து வருகை தரும் அறிஞர்களுக்கும்
தமிழ்ச் சங்க அமைப்பினருக்கும்,
திருக்குறள் நெறி பரப்புவோருக்கும்,
தங்கும் விடுதி,
தஞ்சாவூர் தலைவாழை உணவு
மூன்று நாட்களும் சிறப்பாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
திருவள்ளுவர் சிலை அன்பளிப்பு:-
3 -அடி உயரத்தில் 750 – கிலோ எடையுள்ள திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரி
ஸ்ரீ கிருஷ்ணா சிற்பக் கூடத்தில் வடிவமைத்து,
கன்னியாகுமரி முதல் சென்னை வரை
10 -நாட்கள் அலங்கார ஊர்தியில் ஊர்வலமாக எடுத்து வந்து மாநாட்டில் நிறுவிய பின்னர் தஞ்சாவூரைச் சேர்ந்த
தகுதி வாய்ந்த கல்வி நிறுவனம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்ட நீதிமன்றம், மாவட்ட காவல் அலுவலகம்,
தமிழ்ச் சங்க அமைப்பு இவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக வழங்க இருக்கிறோம்.
மற்றொரு சிலையை
ஆஸ்திரேலியா நாட்டில்
மெல்பர்ன் மாநகரில்
மெல்பர்ன்
தமிழ்ச்சங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கி
இணைய வழியாகத் திறந்துவைத்து மாநாடு தொடக்கவிழாவை நடத்த இருக்கிறோம்.
மாநாட்டு சிறப்பு மலர் :-
திருக்குறளின் சிறப்புகள், அரிய தகவல்கள்.
திருக்குறள்நெறி பரப்புவோரின் அரிய பணிகளைத் தொகுத்து மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடுகிறோம்.
மாநாட்டு சிறப்பு மலருக்கு படைப்புகளை அனுப்ப எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
வாழ்த்துச் செய்திகள் வழங்கலாம்.
வணிக விளம்பரங்கள் தரலாம்.
ஆய்வுத் தொகுதி:
(பேராளர்கள்)
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் எழுதும் திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து ISBN பதிவு எண்ணுடன் புத்தகமாக அச்சிட்டு
மாநாட்டு மேடையில் வெளியிட இருக்கிறோம்.
உடனடியாக பேராளர்களுக்கு
ஆய்வுத் தொகுதி, சான்றிதழ், பொதிப்பை, நினைவுப் பரிசு வழங்கப்படும்.
திருக்குறள் தொடர்பான உங்கள் ஆய்வினை கட்டுரை வடிவில்
6 – பக்க அளவில் MS Word – இல்
Unicode – Fond -இல் தட்டச்சு செய்து
மற்றும்
 ஆகிய இரண்டு மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.
மேலும், ஆய்வுக்கட்டுரை அச்சிட்ட பிரதி ஒன்றை உங்கள் புகைப்படம், வசிப்பிட முகவரி, பணிபுரியும் இடத்தின் முகவரியுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வையுங்கள்.
” தமிழ்த்தாய் அறக்கட்டளை,
மாரியம்மன் கோயில்,
தஞ்சாவூர். 613501.
இந்தியப் பேராளர்களுக்கான கட்டண விபரம்.
பேராசிரியர்கள். தமிழ் அறிஞர்கள் , ஆய்வு மாணவர்களுக்கு
ரூ.1,000
பேராளர்
கட்டணத்தை
இந்தியன் வங்கி
மாரியமன்கோயில் கிளை,
IFSC –
IDIB 000 M 134
கணக்கு எண் :-
979223876
THAMIL THAI TRUST
(தமிழ்த்தாய் அறக்கட்டளை)
என்ற பெயரில் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தி
அதன் நகலை இணைத்து
ஆய்வுக் கட்டுரையுடன்  அனுப்பி வையுங்கள்.
D/D வரைவோலை,
காசோலை (செக்) அனுப்ப வேண்டாம்.
பேராளர் கட்டணத்தை நேரடியாகவும்,
அஞ்சல் (M.0) வழியாகவும் செலுத்தலாம்.
ஆய்வுக் கட்டுரைகளை தற்பொழுதிலிருந்து 31.01.2021 -க்குள் *அனுப்பலாம்.
கடைசி தேதி வரை காத்திருக்காதீர்கள்.
அயல்நாட்டுப் பேராளர் கட்டண விபரம்.
மாநாட்டில் நேரடியாகக் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும்
இந்தியப் பணம்
ரூ.1,500.
கலந்து கொள்ளாதவர்களுக்கு
 (இந்தியப் பணமதிப்பில்) ரூ.2000
10 -க்கும் மேலான ஆய்வுக்கட்டுரைப் பேராளர்களை அறிமுகப்படுத்தி எழுதத் தூண்டுபவர்களுக்கு சிறப்பு சான்றிதழ், பரிசு, விருது வழங்கப்படும்.
பதிப்பாசிரியர் குழுவில் பெயர் சேர்க்கப்படும்.
அமர்வுத் தலைமை வகிப்பவர்களுக்குத் தனியாக சான்று வழங்கப்படும்.
மாநாட்டின் இரண்டாம் நாள் ஆய்வரங்க அமர்வுகள் நடைபெறும்.
அயல்நாட்டுப் பேராளர்கள் மட்டும் முன் அனுமதி பெற்று இணையவழி அமர்வரங்கத்தில் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கலாம்.
நூல் வெளியீடு:
நீங்கள் எழுதியுள்ள கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்
உள்ளிட்ட புத்தகங்களையும்,
ஒலி & ஒளிப்படக் குறுந்தகடு போன்றவற்றையும்
மாநாட்டு மேடையில் தனி அமர்வில் வெளியிடலாம்.
இதற்காக  கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
31.01.2021-க்குள்
உங்கள் வெளியீடு பற்றிய விபரத்தை எங்களுக்குத் தெரிவித்து உங்கள் நிகழ்ச்சியை மாநாட்டு அழைப்பிதழில் இடம் பெறச் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
படைப்பிலக்கியக் கருத்தரங்கம்.
உலகளாவிய தமிழ்ப் படைப்பாளர்.
சமூக செயற்பாட்டாளர்,
பன்னாட்டுத் தணிக்கையாளர்,
கவிஞர் வித்யாசாகர் எழுதிய
நாவல், சிறுகதை,
தன்னம்பிக்கை கட்டுரைகள்,
கவிதைகளை ஆய்வு செய்து 100 -க்கும் மேற்பட்ட பேராளர்கள் நேரடியாகவும், இணையவழியாகவும் பங்கேற்று கட்டுரை வாசிக்கும் வகையில்
கவிஞர் வித்யாசாகரின்
படைப்பிலக்கிய ஆய்வு பன்னாட்டுக் கருத்தரங்கம்”
 27.02.2021. சனிக்கிழமை பிற்பகல்
2 – மணி முதல் மாலை 6-மணிவரை தனி அரங்கத்தில் நடைபெறும்.
இதன் மூலம்
உலகப்புகழ்பெற்ற தமிழ்ப்படைப்பாளி
ஒருவரை இன்னும் உயர்த்துவதற்கும். ஊக்கப்படுத்துவதற்கும்
இந்த நிகழ்வு ஒரு காரணமாக அமையும் என்று நம்புகிறோம்.
சிறப்பு விருது.
தமிழ்மொழி வளர்ச்சிக்கும்,
திருக்குறள் நெறி பரப்பும் பணியிலும் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ள
சாதனையாளர்களுக்கு
சிறப்பு விருது வழங்கப்படும்.
விருது பெறத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள், உரிய தகவல்களுடன் விண்ணப்பத்தை
இந்த நாள் முதல் 31.01.2021-க்குள்  அனுப்புங்கள்.
விருது பெறுவதற்காக அயல்நாட்டில் இருந்து வருகை தர இயலாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் சார்பாக யாரேனும் ஒருவர் விருதைப் பெற்றுக் கொள்ளலாம்.
மாநாட்டு நன்கொடை,
உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாட்டுப் பணிகளுக்கும்,
திருவள்ளுவர் சிலை தயாரிப்புப் பணிக்கும்
 நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் அளிக்கலாம்.
உரிய பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
மாநாட்டு நிகழ்வில் சிறப்பிக்கப்படுவீர்கள்.
நன்கொடை அளித்தவர்களின் பெயர்ப் பட்டியல் மாநாட்டு மலரில் இடம்பெறும்.
இந்திய உள்ளிட்ட அயல்நாட்டு ஒருங்கிணைப்புப் பணி :-
மாநாட்டுப் பணிகளை அவரவர் பகுதிகளில் விளம்பரம் செய்யவும், பேராளர்களைத் தொடர்பு கொண்டு
ஊக்கப்படுத்தி அவர்களை ஈடுபாடு செய்வதற்காகவும்,
மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்க பயணக்குழு அமைக்கவும்,
தகுதியானவர்களிடம் வாழ்த்துச் செய்தி பெற்றுத் தருவதற்காகவும்,
மாநாட்டு சிறப்பு மலர் தயாரிப்பு உள்ளிட்ட
இன்ன பிற மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும்,
தமிழ்நாடு தவிர இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும்,
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, பிரான்சு, அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, கனடா, மொரீசியசு, தைவான் குவைத், துபாய், டென்மார்க், நோர்வே, ரஷ்யா,
உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒருங்கிணைப்புப் பணியை மேற் கொள்ளுமாறு
தன்னார்வத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இந்தப் பணிகளில் ஈடுபட விருப்பம் உடையவர்கள்
கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
ஒரு வேண்டுகோள்.
இந்தப் பதிவை உங்களின் வாட்ஸ்அப் புலனத்திலும், முகநூல் உள்ளிட்ட இணையத் தொடர்புகளில் பகிருங்கள்.
 
இந்த அறிவிப்பை உங்களால் இயன்றவரை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேருங்கள்.
மாநாட்டின் வெற்றிக்கு இதன் மூலம் உங்களின் பங்களிப்பைத் தாருங்கள்.
மேலும் விபரங்களுக்கு,
உடையார்கோயில் குணா,
 ( தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அரசு விருது பெற்றவர்)
தமிழ்த்தாய் அறக்கட்டளை,
மாரியம்மன் கோயில்,
தஞ்சாவூர். – 613501
தமிழ்நாடு, இந்தியா.
(வாட்ஸ்அப் எண்)
+91-7530002454.
+91 – 9443938797.
மாநாட்டுக் குழு. –
கடந்த காலங்களில் எமது அனைத்து பணிகளுக்கும் துணை நின்று வெற்றிதேடித் தந்த பெருந்தகையாளர்கள்
உலகளாவிய நிலையில் பலரும் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கலந்தாலோசித்து மாநாட்டுக்குழு ஒருங்கிணைக்கப்படும்.
மாநாட்டு அறிக்கை விரைவில் அச்சிட்டு வெளியிட இருக்கிறோம்.
உங்கள் ஆய்வுக்கட்டுரையை இப்போதே அனுப்புங்கள்…..
கட்டுரைகள் எங்களுக்கு வந்துசேர்ந்த உடன்
அச்சிற்கு அனுப்பும் பணியையும் உடனுக்குடன் மேற்கொள்கிறோம்.
ஆகையால்,
கடைசி தேதி வரை காத்திருக்காதீர்கள்.

News

Read Previous

‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்

Read Next

மறை சொல்லும் மலைகள் வரலாறு

Leave a Reply

Your email address will not be published.