உங்கள் மொபைல் போன் பேட்டரியை நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

Vinkmag ad

 

Samsung-Galaxy-S4-Batteryநமது வாழ்வில் மொபைல் போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதன் தேவைகளும், அதன் மூலம் பெறப்படும் பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் மொபைல் போன் என்றாலே அனைவருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும்.

அதன் முதல் படி அதன் பேட்டரி. மொபைல் போனால் பயனடைந்தாலும் பேட்டரி மூலம் பலரும் மொபைல் போனை வெறுக்கின்றனர். இதற்கு காரணம் மொபைல் போனை பராமரிக்கும் நாம் அதன் பேட்டரியின் நலனை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும், நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
வழிமுறைகள்
* மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரி மற்றும் ஒரிஜினல் சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும்.
* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்து.
* பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.
* அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது.
* ஈரம் மற்றும் அதிக சூடு, இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.
* பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு பரவும் நிலை ஏற்படும்.
* தொடர்ந்து பாடம் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது எனத் தெரிந்தால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கவும்.
* சார்ஜ் செய்வதனால் பேட்டரியின் அளவு கூடுகிறதா? உடனே எடுத்துச் சென்று போன் டீலரிடம் தரவும்.
* எந்த காரணத்தைக் கொண்டும் பேட்டரியைக் கழற்றிப் பார்ப்பதோ அதன் பாகங்களைக் கழற்றி மாட்டுவதோ கூடாது.
* பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை ஏற்படலாம்.

News

Read Previous

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலைபேசி எண்

Read Next

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *