பகத்சிங் – விடுதலை எழுச்சியின் விடிவெள்ளி

Vinkmag ad
Bagathsinghபகத்சிங் – விடுதலை எழுச்சியின் விடிவெள்ளி
ஆசிரியர் : எஸ்.ஏ.பெருமாள்

            வெளியீடு : வாசல் பதிப்பகம், 40D/ 3 – முதல் தெரு, வசந்த நகர், மதுரை 625 003  செல் : 98421 02133

எஸ்ஏபி என தோழர்களால் அழைக்கப்படும் நூலாசிரியர் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களும் சேர்ந்த அன்றைய முகவை மாவட்டத்தில் செங்கொடி இயக்கத்தை உருவாக்கி வளர்த்து கம்பீரமாக வலம் வந்த தலைவர். இவர் கால் படாத இடமில்லை எனும் அளவுக்கு ஊர் ஊராக நடந்து மக்களைச் சந்தித்தவர். மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்த நேரங்களில் பதிலடிகளுக்குத் தயங்காமல் நின்று அவர்களைப் பாதுகாத்தவர். உலக வரலாறையும் தத்துவங்களின் வரலாறையும் கதைபோலச் சொல்லி கேட்போர் கவனத்தை ஈர்க்கும் பேச்சாளர்.
இந்திய வரலாற்றாசிரியர்கள் பக்தசிங் குறித்த தங்கள் மலைப்பை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. மிகச் சிறு வயதில், மிகக் குறுகிய காலத்தில் காந்திஜிக்கு நிகரான புகழைப் பகத்சிங் இந்திய மக்களிடம் பெற முடிந்தது எப்படி என்ற கேள்விதான் அவர்களை மலைக்க வைத்தது. பாராளுமன்றத்தின் கவனத்தைத் திருப்பக் குண்டு வீசியதில் தீவிரவாத இயக்கத்தின் தாக்கமும், அவர் வீசிய துண்டுப் பிரசுரங்களில் கம்யூனிச இயக்கப் பயிற்சியும், வலியக் கைதானதில் காந்தியின் சத்தியாக்கிரக இயக்க நோக்கமும் இணைந்திருப்ப தாகக் குறிப்பிடுகிறார் மார்க்சிய அறிஞர் இ.எம்.எஸ்.
மாவீரன் பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் வாழ்ந்த களங்களையும் போராடிய கணங்களையும் கண்முன்னே நிறுத்தும் புத்தகம் இது. போலி தேசபக்தி கொடிகட்டிப் பறக்கும் இந்த நேரத்தில் உண்மையான தேசபக்தி என்றால் என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ள அனைவரும் படித்து உள்வாங்க வேண்டிய பொக்கிஷம்.

News

Read Previous

மற்ற உலோகங்களுக்கு இல்லாத கிராக்கி தங்கத்திற்கு மட்டும் ஏன்?

Read Next

தமிழ் ஆள; தமிழ் பேசு..

Leave a Reply

Your email address will not be published.