ஷார்ஜாவில் நிரித்யசமர்ப்பண் என்ற இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி

Vinkmag ad
ஷார்ஜாவில் நிரித்யசமர்ப்பண் என்ற இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி
ஷார்ஜா :
ஷார்ஜா அமெரிக்க பல்கலைகழக அரங்கில் டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் சார்பில்  வெள்ளிக்கிழமை
12.06.2015 மாலை 4.30 மணிக்கு நிரித்யசமர்ப்பண் என்ற இந்திய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி நடைபெற இரு
க்கிறது என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா நாயுடு  தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி 7-வது ஆண்டாக நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு எஸ்திலோ இந்தியா என்ற நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை
வகிக்கிறார்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள போக்குவரத்துறையின் கமிஷனராக உயர் பதவி வகித்து
வரும் தமிழர் டாக்டர் ராஜன் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.
நிரித்தயசமர்ப்பண் என்ற நிகழ்ச்சி நடன ஆசிரியை கவிதா பிரசன்னா தன்னிடம் பயின்று வரும் 100-க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியரின் நடனத்தை அரங்கேற்றும் வகையில் நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகம்மது தாகா, பிரசன்னா, கீதாகிருஷ்ணன், சுந்தர், உள்ளிட்ட குழுவினர்
மேற்கொண்டு வருகின்றனர்.

News

Read Previous

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

Read Next

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published.