பிரான்சில் 11வது நிகழ்வரங்காகத் தொடரும் தைப் பொங்கல் விழா

Vinkmag ad
தகவல் பரிமாற்றம் – பிரான்சில் 11வது நிகழ்வரங்காகத் தொடரும் தைப் பொங்கல் விழா – புலம்பெயர் தமிழர் திருநாள் 2017.
இம்முறை பாரீசு பெரு நகர மையத்திலமைந்துள்ள 20வது நகரசபை வளாகத்தில் (கம்பெத்தா) நடைபெறுகிறது.

புலம்பெயர்ந்து தொடரும் வாழ்வின் நீட்சி ‘நான் யார்?’ என்ற கேள்வியினை எழுப்பி  ‘நாங்கள் யாராக இருக்கலாம்?” என்னும் உணர்வுடன் கூட்டுநினைவாக பீறிட்டெழுகின்றது. இது ‘நாங்கள்’ தொடர்பான ஒருங்கிணைதலை வலியுறுத்துகிறது. இந்த ஒன்றிணைவுக்கு ‘பொங்கல்’ பொருத்தமான பண்பாட்டு நிகழ்வாக அமைகிறது. இது தமிழர் வாழ்வியலுடன் பிணைந்த மரபாகவும், சடங்காகவும், பண்பாடாகவும், கொண்டாட்டமாகவும் இன்றளவும் தொடர்கின்றது.  இதனாலேயே; புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதான நாளாக ‘தைப்பொங்கல்’ அமைந்துள்ளதைக் காண்கிறோம். இந்த உந்துதலால் வேற்றுமையில் ஒருத்துவம் கொள்ளும் தனித்துவ நாளாக – தமிழர் திருநாளாக- தமிழரின் அடையாள நாளாக ‘புலம்பெயர் தமிழர் திருநாளாக” பிரான்சில் மக்களரங்காகப் பதினொராவது தடவையாகத் தொடரப்படுகிறது.

புலம்பெயர் தமிழர் திருநாள் – 2017′ பிரான்சில் பதினொராவது நிகழ்வரங்காகிறது. இம்முறை பாரீசு நகரின் மையத்தில் அமைந்த பாரீசு – 20 நகரசபை முன்றலில் நடைபெறுவதானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக தடமிடுகிறது. தமிழர்களது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் தமிழர் பண்பாட்டு நிகழ்வு இங்கு நடப்பதானது பாரீசு நகரின் பன்மைத்துவ அடையாள அங்கீகாரமாகவே கொள்ளல் பொருத்தமாகும்.
Mairie de Paris – 20ème arrondissement, 6 Place Gambetta, 75020 Paris Cedex 20
(Arrêt: Gambetta – Métro 3)
*Le 13.01.2017 * 15.30 – 18.30 * et *Le 14.01.2017 * 10h30 – 18h30*
இந்த நிகழ்வரங்கம் சாதி -மத -பிரதேச -தேச -வர்க்க பேதங்களற்ற வகையில் தமிழால் ஒன்றிணையும் சாத்தியத்தை பதினொராவது தடவையாக நிகழ்த்தவுள்ளது. சிறப்பான செயற்திட்டங்களுடன் முன்னெடுக்கப்படும் எமது இத்தகைய முயற்சி ஊடகங்கள் வாயிலாகவே வெகுமக்கள் தளத்தில் பரவலாகி அதனோடு இயைந்த பயணத்தில் விரிவாக முடியும். இத்தகைய வழிகளாலேயே தமிழுக்கான – தமிழர் திருவிழாவாக – புலம்பெயர் தமிழர் திருநாள் உலகெங்கிலும் விரவியவர்களாக வாழத் தலைப்பட்டுள்ள எமது சந்ததியினர் ஒன்றுகூடல் நிகழ்வாகி ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ எனவாக நிமிரட்டும்!.
அனைவரும் வருக! –

News

Read Previous

மனம் என்னும் புத்தகம்

Read Next

அமீரகத்திலிருந்து உம்ரா சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *