ஜூலை 15-இல் இலவச பிளாஸ்டிக் சிகிச்சை மருத்துவ முகாம்
சென்னையில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை இலவச மருத்துவ முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் ரைட் மருத்துவமனையில் (ஈகா திரையரங்கின் பின்புறம்) அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இலவச முகாம் நடைபெறுகிறது.
பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் ஜூலை 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீப்புண்களால் ஏற்பட்டுள்ள உறுப்பு ஊனம், தழும்புகளை நீக்குவதற்கு இந்த முகாமில் உரிய ஆலோசனை வழங்கப்படும்; முகாமில் தெரிவு செய்யப்படும் நோயாளிகளுக்கு சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்று ரைட் மருத்துவமனையின் தலைவரும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணருமான ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.