ஜுன் 14, திண்டுக்கல் அருகே நாவல் இலக்கிய முகாம்

Vinkmag ad

மூலம் – http://www.sramakrishnan.com/?p=3969

எஸ்.ராமகிருஷ்ணன்

கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற ஜுன் 14ம் தேதி (14/06/2014) சனிக்கிழமை, நாவல் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன்.

இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது.

இந்த ஒரு நாள் முகாமில் உலகின் தலைசிறந்த நாவல்கள், தமிழ் நாவலின் சமகாலப் போக்குகள், தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள், ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன் நாவல் எழுத விரும்புகிறவர்களுக்கான கலந்துரையாடலும் நடைபெற உள்ளது

திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலையில் இயற்கையான சூழலில் அமைந்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவன வளாகம் ஒன்றில் இந்த முகாம் நடைபெற உள்ளது

முன்பதிவு செய்து கொள்கிற வாசகர்கள் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள முடியும்.

இதற்கான பதிவுக் கட்டணம் ரூ 500.

சென்னையில் இருந்து பயணம் செய்ய விரும்புகிறவர்கள் அதற்கான கட்டணத்தைத் தனியே செலுத்தினால் தனிப்பேருந்தில் இடம் கிடைக்கும்

அதற்கான கட்டண விபரம் மற்றும் முன்பதிவு குறித்து நண்பர் வேடியப்பனிடம் அறிந்து கொள்ளவும்

தொடர்புக்கு :  வேடியப்பன்.

தொலை பேசி எண் : Ph”+91 44 65157525 , Cell +91 9940446650

டிஸ்கவரி புக் பேலஸ்,  எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078.

discoverybookpalace@gmail.com


News

Read Previous

இலவச மருத்துவ முகாம்

Read Next

சிறுபான்மையினர் அஞ்ச வேண்டியதில்லை

Leave a Reply

Your email address will not be published.