சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

Vinkmag ad

https://ta.wikipedia.org/s/3b2r

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியார் கலையரங்கம்

நோக்கம்

சேலம் பகுதியைச்சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம், தமிழக அரசின் வேலைவாய்ப்பு , பயிற்சித்துறையுடன் இணைந்து சேலம் சுழற்சங்கம் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தினை நிகழ்த்த உள்ளது.

நிகழிடம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள பெரியார் கலையரங்கம்.

நாள், நேரம்

26.10.2013, 09.11.2013 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை:

  • பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி , ஒருங்கிணைப்பாளர் , பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம்.
  • தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தை தொடங்கி வைத்து தலைமையுரை: பேராசிரியர் முனைவர். கே. அங்கமுத்து, பதிவாளர் பெரியார் பல்கலைக்கழகம்.

வாழ்த்துரை:

  • திரு. ம. கோ. கொ. விஜய குமார், தலைவர், சேலம் சுழற்சங்கம்.
  • பேராசிரியர் முனைவர். கே. தங்க வேல், துறைத்தலைவர் கணினி அறிவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம்
  • முனைவர். விஷ்ணு வர்தன், திட்ட இயக்குநர், The Centre for Internet& and Society, பெங்களூரு
  • திரு. கதிர்வேல், மண்டல இணை இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை- தமழ்நாடு அரசு.

சிறப்புரை:

  • திரு. மா. தமிழ்ப்பரிதி, துணைப்பேராசிரியர், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை
  • விக்கிமீடியா கருத்தாளர்கள்: திரு. தகவல் உழவன், திருமதி. பார்வதிஸ்ரீ
  • நன்றியுரை: திரு. த. சௌந்தராஜன், செயலர், சேலம் சுழற்சங்கம்.

பயிலரங்கப்பொருண்மைகள்

இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க

இந்நிகழ்வில், பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயரைதமிழகம் தளத்திலோ அல்லது 9750933101, 9442105151 ஆகிய எண்களிலோ தங்களின் பெயரை 21.10.2013 க்குள் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே நிகழ்வில் பங்கேற்கலாம்.

வெளி இணைப்புகள்

  1. தமிழகம்.வலை அறிவிப்பு
  2. விக்கி செய்தியில்


Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge

News

Read Previous

தோப்புத்துறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

Read Next

வதைக்கும் விவாகரத்து வழக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *