சென்னை சுயாதீன திரைப்பட விழா

Vinkmag ad

சென்னை சுயாதீன திரைப்பட விழா – முன்பதிவு தொடக்கம்

பிப்ரவரி 4, காலை 9 மணி முதல் இரவு பத்து மணி வரை. பிரசாத் லேப், RKV ஸ்டுடியோ.

அனுமதிக் கட்டணம். 100, உதவி இயக்குனர்கள், மாணவர்கள், பணக்கஸ்டத்தில் இருக்கும் நண்பர்களுக்கு 50 ரூபாய் மட்டும்.

நண்பர்களே இன்று முதல் பியூர் சினிமா அலுவலகத்தில் IFFC க்கான முன்பதிவு தொடங்குகிறது. பணம் செலுத்தி அதற்கு உரிய ரசீதை பெற்றுக்கொள்ளுங்கள். மொத்தம் 500 பங்கேற்பாலர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. எனவே விரைந்து முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர்அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

அனுமதிக் கட்டணம் 200 இல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விழா உங்கள் விழா. இது மக்கள் திரைப்பட விழா. பணக்கஸ்டத்தில் இருப்பவர்கள் 50 ரூபாய் டோக்கன் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். வேறு எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள். பணமில்லாதவன் பொய் சொல்லமாட்டான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

பிரசாத் லேப் பிரிவியூ திரையரங்கம். சாலிகிராமம்
நிகழ்வுகள்:
8 AM – பதிவு செய்தல்
9 AM – திரைப்படங்களை எப்படி பார்ப்பது?
இயக்குனர் மணிகண்டன்
10 AM – ஹரி கத பிரசங்கா – கன்னடம் – 120 நிமிடங்கள் – அனன்யா காசரவல்லி
12 PM – ரங்கபூமி – ஹிந்தி – 80 நிமிடங்கள் – கமல் ஸ்வரூப்
1:30 – 2:00 – உணவு இடைவேளை
2 PM – ஆறிதழ் அரளிப்பூ (Frangipani) – சிங்களம் – 90 நிமிடங்கள் – விஸாகேச சந்திரசேகரம்
3:30 PM – Is It Too Much To Ask – தமிழ் – 30 நிமிடங்கள் – லீனா மணிமேகலை
4 PM – குழு விவாதம் – LGBTQ புரிதல், சினிமாவில் பெண்கள், திரைப்பட தணிக்கைத்துறையின் அதிகார வரையறை
வழி நடத்துபவர்: லீனா மணிமேகலை
பங்கேற்பு: அனன்யா காசரவல்லி, சணல் குமார் சசிதரன், லோகேஷ் குமார்
5 PM – மாஸ்டர் க்ளாஸ் – சுயாதீன திரைப்படங்களுக்கான திரைக்கதை எழுதுவது எப்படி?
இயக்குனர் பிரசன்ன விதானகே
குறிப்பு: பிரசாத் லேப் அரங்கில் மாலை 6 மணியோடு நிகழ்வுகள் நிறைவடைகிறது.
RKV ஸ்டுடியோ – வடபழனி.
1 PM – ஓராளப்பாக்கம் – மலையாளம் – 112 நிமிடங்கள் – சணல் குமார் சசிதரன்
3 PM – குழு விவாதம் – சுயாதீன படங்களுக்கான சந்தை
வழி நடத்துபவர்: அம்ஷன் குமார்
பங்கேற்பு: தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன், விஜய் ஜெயபால்.
4:15 PM – சிவபுராணம் – தமிழ் – 75 நிமிடங்கள் – அருண் கார்த்திக்
5:30 PM – சிவபுராணம் படக்குழுவினரோடு விவாதம்.
6 PM – சென்னை சுயாதீன திரைப்பட விழா தொடக்க விழா.
குறிப்பு: RKV ஸ்டுடியோவில் நண்பகல் 1 மணியளவில்தான் திரையிடல் மற்றும் விவாதங்கள் தொடங்குகிறது. அதுவரை பிரசாத் லேப் அரங்கில் திரையிடல், விவாதமும் நடைபெறும்.

News

Read Previous

இப்படி எப்படி ஆனோம்.. ?

Read Next

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

Leave a Reply

Your email address will not be published.