கல்வெட்டு பயிற்சிப்பட்டறை

Vinkmag ad
வருகின்ற டிசம்பர் 16, தேதி வெள்ளிக்கிழமை மதுரை அமெரிக்கன் கல்லூரியுடன் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து நடத்தும் கல்வெட்டு பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது.
காலை10 மணி தொடங்கி மதியம் 5.30 வரை இந்தப் பயிற்சி நடைபெறும். இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் பற்றிய கண்காட்சியும் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் அரிய சேகரிப்புக்களின் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
மதியம் 1.30 தொடங்கி கல்வெட்டு வாசித்தல் பயிற்சி பட்டறை நிகழும். இந்த நிகழ்வில் தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் முனைவர்.பத்மாவதி அவர்கள் பயிற்சியை வழங்குவார். பயிற்சியில் குறிப்பாக
  • கல்வெட்டுக்களின் வகைகள்
  • எழுத்துரு வகை அறிதல்
  • காலத்தொடர்பு
  • கல்லெழுத்தில் உள்ள எழுத்துரு மாற்றம்
  • தமிழகத்தின் முக்கிய கல்வெட்டுக்கள்
..ஆகியன விளக்கப்படும்.
இந்த நிகழ்வில் ஆர்வமுள்ளோர் அனைவரும் தங்கள் பெயரைப் பதிந்து கொண்டு நிகழ்வில் பங்கு பெறலாம்.  இப்பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
தொடர்பு கொள்ள
முனைவர்.சுபாஷிணி, தமிழ் மரபு அறக்கட்டளை
திரு.வசந்த் – அமெரிக்கன் கல்லூரி

News

Read Previous

பச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்

Read Next

சிலம்பாட்டம், கம்பு ஊன்றி தாண்டுதல்: முதுகுளத்தூர் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *