இயக்குனர் கிம்-கி-டுக் கின் ஐந்து படங்கள் திரையிடல்

Vinkmag ad
இயக்குனர் கிம்-கி-டுக் கின் ஐந்து படங்கள் திரையிடல்
 
20-03- 2017 முதல் 24-03- 2017 வரை மாலை 6 மணிக்கு…
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
சினிமா ரசனையின் மிக முக்கிய அங்கமான ரெட்ரோஸ்பெக்டிவ் என்ற தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. சென்ற வாரம் முழுக்க தி சேல்ஸ்மென் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற அஸ்கர் பார்ஹாடியின் படங்கள் திரையிடப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட இயக்குனரின் படங்கள் #Retrospective வரிசையில் திரையிடப்படும். ஒரு இயக்குனரின் படங்களை தொடர்ந்து பார்ப்பதன் வாயிலாக அந்த இயக்குனர், கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். இயக்குனர் கிம்-கி- டுக் படங்கள் தொடர்ந்து திரையிடப்படுகிறது.ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இயக்குனரின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படும். சினிமா சார்ந்து இயங்குபவர்கள், உதவி இயக்குனர்கள், மாணவர்கள், திரைப்பட பொது பார்வையாளர்கள், தவறாமல் பங்கேற்க வேண்டிய நிகழ்வு இது.
அனைவரும் வருக….அனுமதி இலவசம்…
திரையிடப்படும் படங்களின் பட்டியல்.
———————————————————
 
20-03- 2017 -The Isle
 
21-03- 2017- Spring summer fall winter spring
 
22-03- 2017 -3 iron
 
23-03- 2017 -Pieta
 
24-03- 2017 -Moebius

News

Read Previous

அம்மை நோய் வராமல் காக்க …

Read Next

மாகொல் பகைமுகத்த வெள்வேலான் என்பவன் யார்?

Leave a Reply

Your email address will not be published.