8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை

Vinkmag ad

தஞ்சை பிரகாஷ், நெல்லை கண்ணன் உட்பட தமிழறிஞர்கள் எட்டு பேரின்
நுல்களை, தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட, மறைந்த தமிழறிஞர்கள் ஐந்து பேர்; வாழும் தமிழறிஞர்கள் மூன்று பேர் என, எட்டு பேரின் நுால்கள், இந்தாண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, மறைந்த நெல்லை கண்ணனின் வாரிசுகளுக்கு, 15 லட்சம் ரூபாய்; கந்தர்வன், சோமலே, ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் வாரிசுகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் என, மொத்தம், 55 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

வாழும் எழுத்தாளர்களான நெல்லை செ.திவான், விடுதலை ராசேந்திரன், நா.மம்மது ஆகியோருக்கு தலா, 15 லட்சம் ரூபாய் என, 45 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இதன்படி, தமிழக அரசு இந்த ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட நுால்களுக்கான பரிவுத் தொகையாக, 1 கோடி ரூபாயை வழங்க உள்ளது.

பார்க்க: https://www.dinamalar.com/news_detail.asp?id=3198031

News

Read Previous

தமிழை வளர்க்க இன்னும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Read Next

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *