சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

Vinkmag ad

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் -20.12.2022.

இவ்வுலகில் அனைத்து

மனிதர்கள் படைப்பு. 

இறைவன் படைப்போ !, 

இயல்பாய் நிகழும்

இனப்பெருக்கமோ ! ,

அனைத்து மனிதருக்கும்

அன்னை -தந்தை ஒன்று.

பசியும் ஒன்று , உறக்கமும் ஒன்று.

ஜனனம்  , மரணமும் ஒன்று .

சிவப்பு நிற உதிரமும் ஒன்று. 

சதையும்,தசையும் ,எலும்பும் ஒன்று.

அவரவர் மரபணுவிற்கேற்ப

அவரவர் பிறந்த சூழ்நிலைக்கேற்ப 

அவரவர் தோலின் நிறமும் ,

அவரவர் உருவ அமைப்பும்

அமைவது உண்டு. அதுவே 

அன்றி வேறேதும் வேறுபாடு 

அன்று  இவ்வகிலந்தன்னில்.

பிறந்ததால் வருவதன்றோ 

மத,இன,சாதி ,மொழி ,

நிறமெனும் வேறுபாடு. 

வளர்கையில் வருவதன்றோ 

பணம் , பதவி ,அந்தஸ்தெனும் 

பலவித வேறுபாடு .

நிலையற்ற வாழ்வில் எதுவும்

நிரந்தரமில்லை ஆயின் 

நினைப்பினில் மட்டும் ஏன்

நிலவ வேண்டும் வேறுபாடு.

மனிதனில் வேறுபாடு மறக்க

மனதினில் மாறுபாடு வேண்டும்.

அன்பினால் அகிலந்தன்னில் 

அனைவரும் இணையவேண்டும்.

பண்பினால் , பரந்த மனதால் 

பாசத்தால் பிணைய வேண்டும்.

வேறுபாடுகள் மறந்து –  மனித

மாறுபாடுகள் களைந்து – பிறந்த

அனைவரும் ஒன்றே என்று

இனிவரும் காலங்களில் -நம்

இதயத்தில் எண்ணம் கொண்டால்

உதயமாகும்  எல்லோர்க்கும் 

ஒளிமயமான எதிர்காலம்.

அன்புடன் ,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

News

Read Previous

8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை

Read Next

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.