முதுமையும் இளமையும்

Vinkmag ad

முதுமையும் இளமையும்
“””””””””‘”””””””””””””””””””””””””””””””
மனிதர்கள் முதுமை அடைவதும்
மரணத்தை தழுவுவதும் இயற்கை
இடைப்பட்ட காலத்தில் சாதித்தது
தனக்காக தாய் மண்ணுக்காக?

சொல்லும் செயலும் நேர்மையாய்
சொந்த ஊர் மண்ணுக்கு
செய்த மனிதநேய செயலால்
சாதித்தது மக்கள் நலனுக்கா?

அடுத்து வரும் சமூதாயம்
நலமுடன் வளமுடன் வாழ
மாசற்ற சூற்றுச் சூழலை
உருவாக்க செய்தது என்ன?

இளைஞர் உங்களை பின்பற்ற
எடுத்துரைத்த செய்தி என்ன?
கையூட்டு பெறாத சமூகம்
உருவாக்க செய்தது என்ன?

கரம் பற்றி சிறுவனிடம்
விதைத்த. கருத்து என்ன?
வாழ்வில் வெற்றி பெற
வாழி காட்டிய முதுமையே!

வாழ்க்கை பாடம் கற்பித்தாயே
கற்பித்தை கற்றானா தம்பி
வாழ்ந்து காட்டுகிறேன் அய்யா
கற்பித்வாறு வாழ்வேன் என்றானோ

                                 தஞ்சை.ந.இராமதாசு
                                          எழுத்தாளர்

News

Read Previous

துபாயில் வேலைவாய்ப்பு

Read Next

இந்திய தேசியக் கொடி

Leave a Reply

Your email address will not be published.