மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வர வழைக்கும் டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம்

Vinkmag ad

மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வர வழைக்கும்

டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம்

மதுரை :

மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம்.

மதுரை நகரின் பாண்டி கோவில் ரிங்ரோடு சந்திப்பில் உள்ளது விக்ரம் ஆஸ்பத்திரி. இந்த ஆஸ்பத்திரியின் 2 மற்றும் 3வது தளத்தில் இருப்பது டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம் ஆகும்.

இந்த ஆஸ்பத்திரியில் கடந்த வியாழக்கிழமை பரமக்குடியைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் இதய பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும் அதனை சரி செய்ய முழுமையாக இரண்டரை இலட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர். அல்லது கலைஞர் காப்பீட்டு திட்டம் இருந்தால் அதன் மூலமும் செய்து கொள்ளலாம் என கூறினர்.

சம்பந்தப்பட்ட நபருக்கு காப்பீடு இல்லாததால் பணம் செலுத்தி சிகிச்சை செய்ய ஒப்புக் கொண்டார். வெள்ளிக்கிழமை இரண்டு ஸ்டண்டுகள் வைக்கப்பட்டு இதய அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சை செய்து ஒரு நாள் கழித்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றொரு அடைப்பு இருந்ததாகவும் அதில் ஸ்டண்ட் வைக்க முயற்சித்ததாகவும் ஆனால் அது உடைந்து விட்டது. மேலும் ஆறு பலூன்கள் இந்த சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது. இதற்காக கூடுதலாக ஒரு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறினர். இதனால் சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

மருத்துவ சிகிச்சைக்கு முன்னர் முழுமையாக இரண்டரை இலட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்துவிட்டு சிகிச்சைக்கு பின்னர் கூடுதலாக பணம் கேட்டுள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் டாக்டர் மாதவனிடம் சென்று கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர் அப்படித்தான் ஆகும். இதெல்லாம் சிகிச்சைக்கு முன்னர் சொல்ல முடியாது. யார் இவர்களை எனது அறைக்குள் விட்டது என மனிதாபிமானமில்லாமல் கத்தியுள்ளார். இதனால் நோயாளியின் குடும்பத்தினரிடம் கூடுதலாக 70,000 ரூபாயை வாங்கி விட்டு டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த செயல் நோயாளிக்கு ஹார்ட் அட்டாக்கை வரவழைப்பது போல் இருப்பதாக அமைந்திருந்தது.

இது தொடர்பாக பிரபல மருத்துவர் ஒருவர் கூறியதாவது : சிகிச்சைக்கான முழுமையான பேக்கேஜ் என கூறிவிட்டு இது போல் வசூலிப்பது மருத்துவர்கள் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து பஸ்ஸில் சென்னை செல்ல பயணி டிக்கெட் மட்டும் தான் எடுக்க முடியும். இடையில் பஸ் பஞ்சர் ஆனால் அது எப்படி பயணி பொறுப்பாக முடியும். அதுபோல் தான் இந்த செயல் அமைந்துள்ளது என்றார்.

தமிழக மருத்துவ சங்க தலைவர் டாக்டர் அபுல் ஹசன் இடம் இது தொடர்பாக தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரும் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார்.

டாக்டர் மாதவனின் இது போன்ற செயல் மதுரை நகரம் மருத்துவ கொள்ளை நகரமாக மாறி வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசும், மருத்துவத்துறையும் இது போன்ற தனியார் மருத்துவ நிலையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News

Read Previous

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு

Read Next

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா

Leave a Reply

Your email address will not be published.