நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

Vinkmag ad

மதரஸாக்களில் அரசு தலையீட்டை தடுத்து நிறுத்தியது இ.யூ. முஸ்லிம் லீக் உலமா பெருமக்களை கண்ணியப்படுத்துவது சமுதாயக் கடமை நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்தான். அவர் களை கண்ணியப்படுத்த வேண்டியது சமுதாயத்தின் கடமை என காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.

தஞ்சை மாவட்டம் மயிலாடு துறையை அடுத்துள்ள நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான இன்று கர்நாடக அமீரே ஷரீஅத் மௌலானா அஷ்ரப் அலி ஹஸரத் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான் ஹஸரத், லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா நூருல் அமீன் ஹஸரத், மிஸ்பாஹுல் ஹுதா முதல்வர் மௌலானா ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸரத், மேலப்பாளையம் மௌலானா பி.ஏ. காஜா முயினுத்தீன் ஹஸரத், சென்னை அடையாறு மௌலானா சதீதுத்தீன் ஹஸரத் உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர்.

இந் நிகழ்ச்சியில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசியதாவது-

சரித்திரப்புகழ் மிக்க நீடூர் மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியின் நூற் றாண்டு விழா தமிழக முஸ்லிம் களின் சரித்திரத்தில் ஒரு உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

தமிழகத்தில் செயல்படு கின்ற அரபிக்கல்லூரிகளில் மிகச் சிறந்த இடத்தை மிஸ்பா ஹுல் ஹுதா பெற்றுள்ளது. இப்படிப்பட்ட ஒருசிறப்புவாய்ந்த பரக்கத்தான நிகழ்வில் நான் பங்கேற்கின்ற பாக்கியத்தை வழங்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும், என்னை அழைத்த விழா குழுவினருக் கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.

அப்துல் கரீம் பாணி ஹஸரத் அரிய சேவை

நீடூரின் பிரபல வணிகராகத் திகழ்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் புதல்வர் சங்கைக் குரிய மௌலானா அப்துல் கரீம் பாணி ஹஸரத் அவர்களால் 1912-ல் தொடங்கப்பட்ட இந்த அரபிக் கல்லூரி இன்று நூற்றாண்டு கண்டுள்ளது.

நீடூரில் ஆரம்ப கல்வி கற்ற அவர்கள் பின்னர் அதிராம் பட்டினத்தில் சூஃபி ஹஸரத் ஷைகுனா ஹஸரத் ஆகியோரி டமும் மார்க்க கல்வி கற்று, பின்னர் வேலூரில் மதரஸா லத்தீப்பிய்யா, பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்திலும் அதனைத் தொடர்ந்து தேவ்பந்த் மதரஸா தாருல் உலூமிலும் படித்து பட்டம் பெற்று இங்குள்ள நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் தாழ்வாரத் தில் மதரஸாவை தொடங்கி அது இந்த அளவிற்கு வளர்வதற்கு அரும் பணியாற்றியிருக் கிறார்கள். அந்த மாமனிதரின் பெயரால்தான் இந்த அரங் கத்தின் பெயரும் அமைக்கப் பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான உலமா பெருமக்களை இந்த மதரஸா உருவாக்கியிருக் கிறது. மிஸ்பாஹுல் ஹுதாவி லிருந்து உருவான ஆலிம் பெருமக்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் சென்று தூய இஸ்லாமிய கருத்துக்களை எடுத்து இயம்பி மார்க்கத்தின் மகிமை பேணி தாங்களும் வாழ்வதோடு மற்றவர்களையும் வாழச் செய்யும் அரும்பெரும் பணியாற்றி வருவது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.

நாமெல்லாம் முஸ்லிம்களாக பிறந்ததில் பாக்கியசாலிகள் தான். ஆனால், உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த வர்கள் சங்கைமிக்க உலமா பெருமக்கள்தான். அவர்கள் வழிகாட்டுதலில்தான் அல்லாஹ் ரசூலுக்குப் பொருத்தமான வாழ்வு முறையே அமைந் திருக்கிறது.

அத்தகைய உலமா பெருமக்கள் சமுதாயத்தின் கண்ணியமிக்கவர்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள். சதா காலமும் இஸ்லாத்தின் விழுமிய அறநெறி கருத்துக் களை எடுத்தியம்பி வாழ்ந்து வரக் கூடிய சங்கைமிகு உலமாக்களை மதிக்க வேண் டிய விதத்தில் நாம் மதிக்கி றோமா, சிறப்பு செய்யும் வகையில் சிறப்பு செய்கிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் மனச்சாட்சியுடன் எண்ணிப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

மஸ்ஜிதுகளில் இமாம்களாக வும், மதரஸாக்களில் ஆசிரியர் களாகவும் நாம் பணியமர்த் துகிற அவர்களின் அன்றாட செலவினங்களை சந்திக்கக் கூடிய வகையிலாவது ஊதி யத்தை நிர்ணயித்து கொடுக்கி றோமா என்றால், பல இடங் களில் இருந்து இல்லை என்ற பதிலே வருகிறது.

சமுதாயத்தில் உயர்ந்து நிற்கின்ற பலபேர் உலமாக்க ளுக்கு உரிய மரியாதை செலுத்துவதை ஆங்காங்கே பார்க்கிறோம். ஆனால், இந்த நிலை எல்லா இடங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே நம் அவா!. ஏனெனில், உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள். அதை உணர்ந்து இந்த கண்ணியத்தை செய்ய சமுதாயம் கடமைப்பட்டிருக் கிறது. அரசு தலையீட்டை தடுத்த தலைவர் பேராசிரியர்

மதரஸாக்களில் கற்பிக் கப்படுகிற அறிவுப்பூர்வமான ஆன்மீகக் கல்விதான் மனி தனை ஒழுக்கமுள்ள – நேர்கோட்டுப்பார்வையில் அழைத்துச் செல்லும். இத்த கைய மதரஸாக்களை தீவிர வாதம் போதிக்கப்படக் கூடிய இடம் என்று விஷமத் தனமான குற்றச்சாட்டு நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் கூட வைக்கப்பட்டபோது, அப் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள், மதரஸாக்கள் என்பது, “மத வெறியை போதிக்கக் கூடிய இடம் அல்ல; அற நெறியை போதிக்கக் கூடிய இடம்��. அங்கு படிக்கின்ற மாணவர் களுக்கு எவரையும் புண்படுத் தச் சொல்லித் தரப்படுவ தில்லை. அவர்களை பண் படுத்தவே கற்றுத் தரப்படு கிறது. மனிதனை மனிதனாக வும், எல்லா மக்களையும் சகோதரர் களாகவும், இணங்கி வாழக் கூடிய நல்லற பயிற்சியே மதரஸாக்களில் தரப்படுகின் றது. நானும் மதரஸாவில் உருவான ஒரு மாணவன்தான். எனவே, மதரஸாக்களை குறை சொல்பவர்கள் அதை நிரூபிக் கத் தயாரா? என நாடாளுமன் றத்தில் கேள்விக்கணை எழுப்பி கர்ஜித்தவர் முஸ்லிம் லீகின் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள்தான்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாதனை அனைவருக்கும் கல்வி என்ற கட்டாய கல்வித் திட்டத்தை மத்திய அரசு நடைமுறையாக்கியபோது அதிலே மதரஸாக்களையும் உட்புகுத்த ஆயத்தமான சமயத்தில் மதரஸா பாடத் திட்டங்களை மாற்றியமைத்து நவீன அறிவியல் கல்வியையும் வழங்க முடிவு செய்தது. மதரஸா பாடத் திட்டத்தில் கை வைக்க உலமாக்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என வாதம் செய்து அறிவியல் கல்வியை வேண் டுமானால் மத்திய அரசு பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யலாம். ஆனால், மதரஸா பாடத் திட்டங்களை நீங்கள் கையாளக்கூடாது என தடுத்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சாரும். சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் உரிமை காக்கும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதால் மாண்புமிகு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலிடம் இந்த கருத்தை நான் வலியுறுத்தி மத்திய அரசின் தலையீட்டை தடுத் தேன் என்பதை இங்கு பதிவு செய்ய கடமைப்பட் டுள்ளேன். இன்றைய கால கட்டத்தில் மதரஸாக்களை நடத்துவ தென்பது பெரும் சவாலாகி விட்டது. பொருளாதாரரீதியாக கிடைக்கப்பெறும் அனு கூலங்கள் படிப்படியாக குறைந்து விட்டன. எனவே, ஒட்டு மொத்த தமிழகத்தில் எல்லா அரபி மதரஸாக்களும் சிறப்பாக நடத்துவதற்கு சமு தாயத்தின் பெருந்தனக் காரர்கள் முன் வந்து கூட்டு முயற்சியாக எல்லா மதர ஸாக்களும் அதன் தேவைகள் குறைவின்றி நிறைவேறி அதன் பணிகள் தொய்வின்றி தொடர பக்கபலமாக இருக்க வேண்டும். இதற்கு ஜமாஅத்தார்களும் – அமைப்புகளை நடத்துகின் றவர்களும் – சமூக நல ஆர்வலர்களும் தூண்டுதல் துணையாக இருத்தல் வேண் டும். இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டார்.

News

Read Previous

துபாயில் கூடிய ஈமான் அமைப்பின் செய‌ற்குழு

Read Next

சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *