துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் குடும்ப‌ தின‌ விழாவில் க‌ல‌க்க‌ல் குடும்ப‌ம் 2012

Vinkmag ad
துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் குடும்ப‌ தின‌ விழா ‘கலக்கல் குடும்பம் – 2012’ எனும் பெய‌ரில் கிரீக் பார்க், குழ‌ந்தைக‌ள் ந‌க‌ர‌ அர‌ங்கில் 08.06.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை வெகு சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து.
துவ‌க்க‌மாக‌ அமீரக தேசிய கீதம் ம‌ற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தினை துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்க‌ளின் குழந்தைகள் உற்சாக‌த்துட‌ன் பாடின‌ர். திருக்குறளை செல்வன். விஜயேந்திரன் அத‌ன் விரிவுரையுட‌ன் வ‌ழ‌ங்க‌ இன்று ஒரு தகவல் மூல‌ம் குடும்ப‌ உற‌வுக‌ள் குறித்து செல்வி. ஜனனி கோபாலகிருஷ்ணனின் வ‌ழ‌ங்கிய‌ வித‌ம் அனைவ‌ரையும் நெகிழ‌ச் செய்வ‌தாக‌ அமைந்திருந்த‌து.
துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி மாலா சுரேஷ் த‌லைமை தாங்கினார். வரவேற்புரையினை வ‌ழ‌மை போல் பொதுச்செயலாளர் ஜெகநாதன் வ‌ழ‌ங்கினார். அத‌னைத் தொட‌ர்ந்து புர‌வ‌ல‌ர்க‌ள் பூங்கொத்து வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.
சந்திரா கீதாகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்க‌ள‌து குழந்தைகள் பாட‌ல் நிக‌ழ்வினை வ‌ழ‌ங்கின‌ர்.
அத‌னைத் தொட‌ர்ந்து திரு. ப‌ரிமேமேளழகன், திருமதி. பெட்டினா ஜேம்ஸ், திருமதி. புவனா, திரு. சரவணன், திரு. விஜயேந்திரன், திரு. விஜயராகவன், திரு. கோபாலகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. பிரசன்னா, திரு. கார்திக், திரு. ராஜ்குமார், திரு. சக்ரவர்த்தி, திரு. கல்யாணசுந்தர் ஆகியோர‌து குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளை வ‌ழ‌ங்கி குடும்ப‌ தின‌ விழாவினை ப‌ல்சுவையுட‌ன் வ‌ழ‌ங்கி பார்வையாள‌ர்க‌ளைக் க‌வ‌ர்ந்த‌ன‌ர்.செல்வன். ஆகாஷ் அருள் கீ போர்டு வாசித்தார். துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ க‌மிட்டி உறுப்பின‌ர் பாலகிருஷ்ணன் மற்றும் திருமதி. கீதா பாலகிருஷ்ணன் ஆகியோர் துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கான வினாடி வினா நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தினர்.
நடன நிக‌ழ்வினை கவிதா பிரசன்னாவின் குழுவினரும், குடும்ப நிகழ்ச்சியினை விஜயராகவன் மற்றும் குடும்பத்தினர் வ‌ழ‌ங்கின‌ர்.
நன்றியுரையினை இணைப் பொருளாள‌ர் சுந்தரராஜன் நிக‌ழ்த்தினார்.
நிகழ்ச்சியினை நிறுவ‌ன‌ப் புர‌வ‌ல‌ர் ஏ. முஹமது தாஹா, க‌மிட்டி உறுப்பின‌ர் பாலகிருஷ்ணன், திருமதி. கீதா பாலகிருஷ்னணன், திருமதி. தேவி விஜயராகவன் மற்றும் திருமதி. சந்திரா கீதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொகுத்து வ‌ழ‌ங்கின‌ர்.
இறுதியாக‌ இந்திய‌ தேசிய‌ கீத‌த்துட‌ன் நிக‌ழ்ச்சி இனிதே நிறைவுற்ற‌து.
படங்கள் உதவி : திருவண்ணாமலை சசிகுமார்

News

Read Previous

உறங்கும் போது வருவதல்ல; உறங்க விடாமல் செய்வது தான் கனவு: அப்துல் கலாம்

Read Next

அன்பின் தமிழ் நெஞ்சங்களே—இவருக்கு உதவலாமே!

Leave a Reply

Your email address will not be published.