துபாயில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு நூல் இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா

Vinkmag ad
துபாய் : துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் எழுதிய‌ முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா 03-05-2012 வியாழ‌ன் மாலை துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் ந‌டைபெற்ற‌து.
விழாவிற்கு அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் முத‌ல், இர‌ண்டு பாக‌ங்க‌ளை வெளியிட்ட‌ அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை இனி வ‌ரும் பாக‌ங்க‌ளையும் வெளியிடும். திண்டுக்க‌ல் ஜமால் முஹைதீன் கிராஅத்-துடன் இனிதே ஆரம்பமானது.
துபாய் ம‌ண்ட‌ல‌ச் செய‌லாள‌ர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிக‌ழ்த்தினார்.
முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு நூல் இர‌ண்டாம் பாக‌த்தின் முதல் பிரதியை பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி வெளியிட அண்ணலார் அறக்கட்டளையின் நிறுவனரும், அல் வாஹா டாக்க்குமெண்ட் நிறுவ‌ன‌ உரிமையாளருமான சமுதாய புரவலர் ஜனாப்.சர்ஃபுத்தீன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை நாவலர் கவுஸ் முஹைதீன் வெளியிட அபுதாபி மண்டல மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி  பெற்றுக்கொண்டார். மூன்றாம் பிரதியை கவிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது வெளியிட எழுத்தாளர் திருச்சி சையது பெற்றுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது அவர்கள் காயிதே மில்லத் அவர்கள் காஞ்சிபுரம் சென்ற போது அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள் (சங்கர மடங்கள் போன்ற புனித அமைப்புகள் இருந்த போதும்) உங்கள் வருகையால் இந்த காஞ்சியே புனிதமடைகிறது என்றார் அப்படி சொல்லப்பட்ட ஒரே தலைவரின் பெயரில் இயங்கும் இயக்கத்தின் பிரதிநிதிகளாக நீங்கள் இருப்பது மனநிறைவளிக்கிறது.
அத‌னைத் தொட‌ர்ந்து நாவ‌ல‌ர் கௌஸ் முஹைதீன் விழாப் பேருரை நிக‌ழ்த்தினார்.
துணைத்த‌லைவ‌ர் காய‌ல் நூஹு சாஹிப், பொருளாள‌ர் ஹ‌மீதுர் ர‌ஹ்மான், சோனாப்பூர் ப‌குதி செய‌லாள‌ர் ர‌ஃபீக், ர‌ஹ்ம‌த்துல்லாஹ், திருச்சி சைய‌து, அமைப்புச்செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், ஃபுஜைரா மண்டல செயலாளர் வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா உள்ளிட்டோர் வாழ்த்துரை நிக‌ழ்த்தின‌ர்.
விழா நிகழ்வுகளை பேரவையின் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

News

Read Previous

காலக்கொடுமை

Read Next

அறஞ்செய விரும்பு – கவிஞர் இ. முஹம்மது அலி

Leave a Reply

Your email address will not be published.