துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் முத‌லாம் ஆண்டு விழா

Vinkmag ad

துபாய் : துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் முதலாம் ஆண்டு விழா 23.03.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை அல்த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து.
விழாவிற்கு த‌மிழ்த்துளி அமைப்பின் த‌லைவி ப்ரியா விஜ‌ய் த‌லைமை தாங்கினார். த‌மிழ்த்தாய் வாழ்த்துட‌ன் விழா இனிதே தொட‌ங்கிய‌து.
சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ரேடியோ ஹ‌லோவின் ந‌ட்ராஜ் ப‌ங்கேற்றார். த‌ன‌து வ‌ழ‌க்க‌மான‌ ந‌கைச்சுவை பாணியில் விளையாட்டை ந‌ட‌த்தி ப‌ரிசுக‌ளை வ‌ழங்கினார்.
தமிழ் மொழியின் சிறப்பு பற்றி ஒரு காணொளி நிக‌ழ்ச்சி காட்டப்பட்டது. இத‌னை பெற்றோர்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் ஆர்வ‌த்துட‌ன் க‌ண்டு க‌ளித்த‌ன‌ர். க‌லை நிக‌ழ்ச்சிக‌ளும் இட‌ம்பெற்ற‌ன‌ர். விருதை மு செய்ய‌து உசேன் அமீர‌க‌த்தில் த‌மிழ்க் குழ‌ந்தைக‌ள் த‌மிழில் பேச‌ வேண்டும் எனும் நோக்க‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் த‌மிழ்த்துளி அமைப்பின் த‌மிழ்ச் சேவையைப் பாராட்டி பாட‌ல் பாடினார்.
தமித்துளியின் உறுப்பினர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவுப்பரிசு, தமிழ் தொடக்க நூல், எழுது பொருட்கள், பரிசுப்பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிக‌ழ்விற்கான‌ ஏற்பாடுக‌ளை மாயா, த‌மிழ்ச்செல்வ‌ன், விஜ‌ய், பாவை நியாஸ், பாலாஜி, பிர‌ச‌ன்னா, ர‌ம‌ணி உள்ளிட்ட‌ குழுவின‌ர் செய்திருந்த‌ன‌ர்.

News

Read Previous

சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி

Read Next

துபாயில் ந‌டைபெற்ற‌ செம‌சிங்க‌ர் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *