சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்

Vinkmag ad

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியருடன்

தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 05-05-2012 அன்று, மாலை 5  மணி முதல் 7 மணி வரை, “தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்” நிகழ்ச்சி ஒன்றை, சிங்கப்பூரில் ஜாலான் சுல்தான் சாலையில் அமைந்துள்ள சுல்தான் பிளாசாவில் மிகச்சிறப்பாக நடத்தியது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் 24  ஆண்டுகள் அனுபவம் பெற்றவரும், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் T அப்துல் ரஜாக்,  சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார்.

அதிநவீன விஞ்ஞான வளர்ச்சி கண்டுவரும் கணிணியுகத்தில், சிங்கப்பூரில் மட்டுமின்றி உலக அரங்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவாகி வரும் மாறுதல்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்களைப் பற்றியும், அவைகளை போட்டித்திறன்மிக்க யுக்திகள் கொண்டு எவ்வாறு எதிர்கொள்ளலாம்? என்பது பற்றியும் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டன.

சங்கத்தின் துணைச் செயலாளர் இத்ரிஸ் மாலிம் வரவேற்புரை வழங்க, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார் சங்கத்தின் துணைத் தலைவர் முஹம்மது ஜின்னா. அமானுல்லாஹ் பொன்னாடை போர்த்த, சிறப்பு விருந்தினரின் 24 ஆண்டு கால உயர்கல்விச் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார் சங்கத்தின் தலைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர். முஹம்மது ஹனீபா தாஜுதீன் வாழ்த்துரை வழங்க, நிறைவாக நன்றி கூறினார் அப்துல் மாலிக்.  நிகழ்ச்சியை நெகிழ்ச்சியோடு வழிநடத்தினார் நிக்சன் செல்வராஜ்.

இச்சங்கத்தின் உறுப்பினர்களும் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களும் கலந்துகொண்ட இக்கலந்துரையாடல், பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்து கொண்ட அரிய நிகழ்வாக அமைந்திருந்தது.

******

செய்தி: முஹிய்யத்தீன் அப்துல் காதர்

தலைவர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ________________________________________________________________

JAMAL MOHAMED COLLEGE ALUMNI ASSOCIATION (SINGAPORE CHAPTER)

100 JALAN SULTAN #09-07 SULTAN PLAZA, SINGAPORE 199001

Tel: 63981020 Fax: 63981030 Email: contact@jmcalumni.org.sg

Website: www.jmcalumni.org.sg  UEN No.: T10SS0160K

News

Read Previous

துபாயில் இன்ஸ்டியூட் ஆஃப் சார்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 30 வ‌து ஆண்டு விழா

Read Next

பயணம்

Leave a Reply

Your email address will not be published.