குயில் பாடிய குயில்

Vinkmag ad

குயில் பாடிய குயில்
          – கண்ணதாசன்

ஓராயிரம் குயில்கள்
      உட்காரும் சோலையிலே
ஒருகுயில் கண்டானடி- பாரதி
      உடன் குயிலானானடி!

தேராயிரம் தவழும்
     செந்தமிழ் வீதியிலே
தேரொன்று கொண்டானடி- பாரதி
    சிலையென் றமர்ந்தானடி!

காராயிரம் மிதக்கும்
    ககனத்திலே பறந்து
காரினுள் ஒளிந்தானடி-பாரதி
   கவிமழை பொழிந்தானடி!

தானென்றகந்தை கொண்டு
   தலைசாய்க்கும் மன்னர் முன்னும்
நானென்று நின்றானடி- பாரதி
   நாட்டினை வென்றானடி!

பத்துவிரல்களுள்ளும்
    பாட்டினை ஊற்றிவைத்து
முத்தாய் உதிர்த்தானடி- பாரதி
   முடிகொண் டமர்ந்தானடி!

காணி நிலத்தை எண்ணிக்
    கனிந்து கிடந்த மன்னன்
மாநிலம் பெற்றானடி- மேலும்
    வானையும் தொட்டானடி!

பாரதி பாடிவைத்த
   பாடலுக் கீடுவைக்க
யார்கவி செய்வாரடி- பாவலர்
   வேறெதைச் சொல்வாரடி?

News

Read Previous

இணைய(யா)நட்பு

Read Next

ஏக்கம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *