கபில்தேவ்

Vinkmag ad

நன்றி:‍  https://en.wikipedia.org/wiki/Kapil_Dev

“கபில்தேவ்”

___________________________________ருத்ரா

பந்துகளின் வீரனே!

மட்டையடிகளின் தீரனே!

களத்தில்

மக்கள் கண்களை யெல்லாம்

கொள்ளை கொண்ட‌

பேரழகனே!

“எண்பதுகளின்”

கிரிக்கெட் வரலாற்றில்

முதல் அட்டை முதல்

கடசி அட்டை வரை

பொறித்து நின்ற பொன்னான‌

எழுத்துக்கள் எல்லாம்

உன் பெயர் தானே!

கிரிக்கெட் மைதானம்

ஆகாயத்தையே

கோப்பையாக்கித் தந்த போது

“கபில்”என்ற பசிபிக் பெருங்கடலின்

உற்சாக நுரை வெள்ளம் அல்லவா

அங்கே

அலைகளால் நிரப்பி வைத்தது.

பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப்

அவர் எனர்ஜி என்று

நீ 

விளம்பரத்துக்காக 

சொன்ன போதும்

எங்கள் காதில் விழுந்ததெல்லாம்

“கபில்” இஸ் தி சீக்ரெட் ஆஃப்

அவர் எனர்ஜி”

என்பது தானே!

அரி என்றால் தமிழில் சிங்கம்.

திறமை கொண்ட‌

அரியானாவின் அரியே!

பாரதத்தின் ரத்தினமே

விருதாக்களாய் நிற்கும் விருது

வரும் வரையா காத்திருப்பது?

ஆம்.

கர்ஜனையோடு சொல்கின்றோம்

பாரதத்தின் ரத்தினமே!

“ஹரியானா ஹரிகேன்” எனும்

சுழல்பந்துகளின் சூறாவளியே!

நீ நீடூழி வாழ்க!

மீண்டும் சுடர் பூத்து

எழுக!

உடல் நலம் செழித்து

எழுக எங்கள் சிங்கமே!

____________________________ருத்ரா

News

Read Previous

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு

Read Next

விநாயகர் சதுர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *