அமீரகத்தில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வரும் கீழக்கரை முபாரக் முஸ்தபா

Vinkmag ad

அமீரகத்தில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வரும் கீழக்கரை முபாரக் முஸ்தபா

அமீரகத்தில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வரும் கீழக்கரை முபாரக் முஸ்தபா

அல் அய்ன் நகரின் இந்திய சமூக மையத்தின் தலைவராக இருப்பவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா. இவர் புலவர் முஸ்தபா அவர்களின் மகனாவார்.

அல் அய்ன் நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் கிளை மேலாளராக இருந்து வருகிறார். சமூகப்பணியில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக அல் அய்ன் இந் திய சமூக மையத்தில் தன்னை இணைத்து சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந் த மையம் அபுதாபி இந்திய தூதரகம், அமீரக சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இதன் நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். எனினும் இந் த மையத்தில் தேர்தல் நடத்தப்படாமல் அனைவரது ஆதரவுடன் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந் த பதவி ஒரு வருடமாக கொரோனா பாதிப்பு காரணமாக தொடர்ந் து மூன்று ஆண்டுகள் பதவி வகித்தார். மறுமுறை தேர்தல் வரும் போது இவரே மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் தலைவர் பொறுப்பை இவர் வகித்து வருகிறார்.

இதன் மூலம் தேர்தல் இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, அமீரகத்தில் உயிரிழந் த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அவரவர் சமய வழிகாட்டுதல்படி நல்லடக்கம் செய்வது, தகனம் செய்வது,  சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

மேலும் இந்திய தூதரகத்தின் அனுமதியுடன் பாதிக்கப்பட்ட  வீட்டு பணிப்பெண்கள் பாதுகாப்புடன் தங்கி சொந் த ஊர் திரும்பி செல்ல உதவுவது, தொழிலாளர்களுக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

மேலும் பணிப்பெண்களுக்கான பாதுகாப்பு மையம் இவருடைய மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பான பணிகள் காரணமாக இந் திய தூதரகம் அவருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்துள்ளது.

தன்னடக்கத்துடன் மனித நேய மிக்க பணிகளை செய்து முபாரக் முஸ்தபா அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

அல் அய்ன் முபாரக் முஸ்தபா  தொடர்பு எண் +971 50 453 3250

News

Read Previous

தமிழமுதே மறைந்தாயோ !

Read Next

சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் – பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.முருகேஷ் வலியுறுத்தல் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *