பெப்பர் சிக்கன்

Vinkmag ad

 

சிக்கன்- 1கிலோ

வெங்காயம் – 2

தக்காளி- 2 அல்லது கேன் தக்காளி பேஸ்ட் – 1/2 டின்

மஞ்சள்த்தூள் – 1 தேக்கரண்டி

காய்ந்த வத்தல் – 2

கறிவேப்பிலை- ஒரு கொத்து

தனியாத்தூள் – 1 மே.கரண்டி

சீரகம் – 1 மே.கரண்டி

மிளகு – 2 – 3 மே.கரண்டி (காரம் தேவைக்கு அளவினை கூட்டிக்கொள்ளலாம்)

உப்பு- தேவைக்கு

எண்ணெய் – 2 மே.கரண்டி

Method

Step 1

சீரகம் + மிளகினை மிக்ஸூல் பொடி செய்துக்கொள்ளவும். நல்ல பழத்த சிகப்பு நாட்டு தக்காளியினை மிக்ஸூயில் அரைத்து வைக்கவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

Step 2

கடாயில் எண்ணெய் ஊற்றிய பின்பு தாளிப்பு காய்ந்த வத்தல் , கறிவேப்பிலை போடவும். பிறகு நறுக்கி வெங்காயம் போட்டு வதக்கவும்

Step 3

நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள்த்தூள் தக்காளி பேஸ்ட் மற்றும் தனியாத்தூள் சேர்த்து நன்றாக சிம்மில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

Step 4

பிறகு சுத்தம் செய்து வைத்த சிக்கன் கறி துண்டுகளை சேர்க்கவும். தேவைக்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். நன்றாக கரண்டி வைத்து பிரட்டி விடவும். மசாலா எல்லா இடங்களிலும் பரவலாக படும் படி பிரட்டி விடவும்.

Step 5

மூடி போட்டு சிம்மிலே வேக வைக்கவும். இடை இடையே கரண்டி வைத்து கிளறி விடவும்.

Step 6

முக்கால் பாகம் சிக்கன் வெந்த பிறகு பொடித்து வைத்த சீரகம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி விடவும். எண்ணெய் நன்றாக விட்ட பிறகு அடுப்பினை அணைத்து இறக்கவும்.

Step 7

சுவையான பெப்பர் சிக்கன் ரெடி. சப்பாத்தி, நாண், ரைஸ், பிரியாணி எல்லா வகை உணவுக்கும் இந்த பெப்பர் சிக்கன் சைட் – டிஷ் சூப்பராக இருக்கும்

இந்த குறிப்பினை நமக்காக அனுப்பியவர்

மீரா அபூ – லண்டன்
Kayalsamayal.com

News

Read Previous

குவைத்தில் “பத்ரு யுத்தம் – இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்” புனித ரமழான் சிறப்பு நிகழ்ச்சி!

Read Next

மரபு வழி மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published.