ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?

Vinkmag ad

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்

 

கர்பலா என்னும் பகுதியிலே – ஒரு

கடிமன சரிதை நடந்ததுவே !

உருகிடும் மனமும் உதிரமுமே – அதில்

உறைந்திடும் சிந்தையும் செயல்களுமே !

 

 

ஜனநா யகத்தின் ஒளியேற்ற – நாட்டு

ஜனங்களின் உரிமையை நிலைநாட்ட

தனதுயிர் சிறிதெனக் களமேற்று – ஹுஸைன்

துள்ளியே எழுந்ததும் மறந்திடுமா?

 

 

கொடுமனம் கொண்ட எஜீதவரும் – நற்

குணமிகக் கொண்ட ஹுஸைனவரை

அடிமைக்கும் அடிமையாய் நடத்தியதை – இந்த

அகிலத்தின் நெஞ்சம் மறந்திடுமா ?

 

 

தாகித்த ஹுஸைனார் நீரருந்த – புராத்

தண்ணீர் தரவும் மறுத்தவரை –

மோதூத்த அரசியல் வீணர்களை – இன்றும்

முஃமின்கள் மனமும் மறந்திடுமா ?

 

 

பெருமான் நபிகள் பேரர் ஹுஸைன் – கர்பலா

போரில் மாண்டது மறந்திடுமா ?

அருமை ஹுஸைனார் ஜனநாயக – உணர்வை

அகிலம் என்றும் மறந்திடுமா ?

News

Read Previous

இதுவே எனது இந்தியா

Read Next

பாரதிதாசன் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *