ஷரீஅத்

Vinkmag ad

ஷரீஅத்தா? உயிரா?
ஷரீஅத்தே எமது உயிர்…

நாட்டை
ஆளவந்தாயா?
சுடுகாடாக
ஆக்கவந்தாயா?

தேசியக் கொடியின்
பச்சைக்கு மதசாயம்
பூசுபவனே
வான்நதியில் நீந்தும்
பிறைக்கு என்னசாயம்
பூசுவாய்?

பாரதம் பெயர்மாற்றி
பசுபாதம்
என அறிவித்துவிடு!

முஸ்லீம்களை
பாகிஸ்தான் கடத்து
கிறித்துவர்களை
வாடிகன் கடத்து
பௌத்தர்களை
இலங்கை கடத்து
எம்சகோதர
இந்துக்களை
நேபாளம் கடத்து…!

அவாளை மட்டும்
அங்கீகரித்துக் கொள்!
அவாளுக்காக
அவாளின்
ஆட்சி தொடரட்டும்..!

விவசாயி வியாபாரி
சாலைப்பணி ஆசாரி
கொத்தனார் கூலி
துப்புரவாளர் கோனார்
சுமைதூக்குபவர்
மாடுமேய்ப்பான்
தாசில்தார் கலெக்டர்
பியூன் நீதிபதி அமீனா
MLA MP
எல்லாவற்றிற்கும்
அவாளையே நியமி…!

பெரியபதவி
சிறியமதி – நாடு
சீர்படுமா? சீரழியுமா?

வறுமை பசி பட்டினி
வேலை வாய்ப்பு திண்டாட்டம்
நதிநீர்ப் பிரச்சனை
நக்ஸலைட் அட்டூழியம்
மீனவர் கொடுமை
விவசாயி தற்கொலை
விலைவாசி ஏற்றம்
தலைவிரித்தாட…

நாட்டைக் காப்பாற்ற
நாதியில்லை!

எமது ஷரீஅத்தில்
கைவைக்கத் திரிகின்றாய்!

ஷரீஅத்
இஸ்லாமியச் சட்டம்
மட்டுமல்ல;
எங்கள் இன்னுயிர்
எங்கள் மானம்
எங்கள் வாழ்வு!

ஷரீஅத்தை
முடக்க நினைத்தால்
எங்கள் பிணம்மீதே
உன் ஆட்சித்
தொடரும்!

ஷரீஅத்தா? உயிரா?
ஷரீஅத்தே எங்கள் உயிர்..!
– மிஸ்கீன்
இஸ்லாமிய அறிவகம்
(11/10/2016)

News

Read Previous

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா……???

Read Next

சட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *