வைரமுத்துவா ? வரி முத்துவா ?

Vinkmag ad

வைரமுத்துவா ? வரி முத்துவா ?

வைரமுத்து என்றிருந்த நீ வைரியாகிப் போனது ஏன் ?.

கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய நீ கள்ளிப்பால் கொடுத்தது ஏன் ?
அவரவர் நம்பிக்கையில் அவரவர் வாழுகையில்
அடுத்தவர் நம்பிக்கையைப் பழித்தது ஏன் ?- முன்பு
ஆண்டவர்களை அண்டிப்  பிழைக்கும் நீ
ஆண்டாளைப் பழித்து அருவருப்பாய்   பேசியது ஏன்  ?
இலக்கியவாதி என்று இருமாந்திருந்த  உன்னை
இயக்கிப் பின்னணியில் இருந்த சீமான்கள்   யார் ?
தமிழ்  இலக்கியங்கள்  அனைத்தும்
இறையுணர்வை உணர்த்துகையில் – எந்த
இலக்கோடு பேசினாய் , இலட்சங்கள் பெற்றாயோ ?
வேலிக்கு ஓணான் சாட்சியுரைப்பதுபோல்
வெளிநாட்டு ஆய்வாளனை துணைக்கு அழைத்தாயோ ?
பகுத்தறிவுவாதி என்றால் நீ பிறந்த மதத்தினிலே
வகுத்தவற்றை முதலில் பகுத்தறிந்து பார்க்கில்லையே ?
கருவில் உதித்ததனால் கோசலையின் மகனாக
ராமன் அவதாரமில்லை, அவனுக்கு ஏன் கோயிலென்றாய் ?
மேரியின் கருவில்தான்   வந்துதித்தார் இயேசுபிரான்
அவருக்கு ஏன் கோயிலென்று என்றேனும் கேட்டாயோ ?
கர்த்தரைக் கணவராய் வரித்து கன்னியாஸ்திரீகளெல்லாம்
அர்ப்பணிப்பார் தம் வாழ்வை , அதனை அறிந்திலையோ ?
அர்பணித்தாள்  ஆண்டாள் அரங்கனுக்கே தன்னை அதன்
அர்த்தத்தைத் திரித்து அவதூறு பேசினையே ,
முந்தி விரித்தவளென்று , மூடனைப்போல் பேசினையே
சந்தி சிரிக்குதடா உன்னை சாடித் தூற்றுதடா
காசுக்கு உடலை விற்பதுதான் வேசித்தனம் – உன்போல்
காசுக்கு விஷக்கருத்தை விதைப்பதுவும் வேசித்தனம் .
தமிழ் காட்டுமிராண்டி மொழி , தமிழன் காட்டுமிராண்டி என்று
உமிழ்ந்த பெரியார் வழியை பின்பற்றும் அறிவிலியே -அந்தத்
தமிழால்தான் உண்கின்றாய் , உணர்கின்றாய்  , வாழ்கின்றாய் .
தமிழ்க் கடவுள் ஆண்டாளைத் தாழ்த்தியும் பேசுகிறாய் .
உன்வீட்டிலுள்ளோர் ஆத்திகராய் வாழ்கின்றார்
உன்மத்தம் கொண்ட நீ நாத்திகனாய் வாழ்கின்றாய்  – கேட்டால்
அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதில்லையென்றாய்.
அடுத்தவர் மத சுதந்திரத்தில் தலையிடுதல் முறையாமோ ?
வீட்டைக்கட்டுப் படுத்த முடியாத வீணனாக இருக்கும் நீ
நாட்டைத்திருத்திடவோ , நாக்கூசாது பேசுகிறாய் -நீ
அடிவருடும் தலைவனது இல்லத்தார் எல்லோரும் -இறை
அடிதொழுது பிரார்த்தனைகள் அன்றாடம் செய்கின்றார் -நீ
புரட்டும் பொய்யும் பேசி, வறட்டு வாதம் செய்து
புரட்டும் செல்வம் கொண்டு , பகட்டாய் வாழ்ந்திடவோ ?
ஆத்திகரின் பொறுமை பேடித்தனமல்ல  , வெகுண்டெழுந்தால்
நாத்திகரெல்லாம்  நசுங்கிப்போய்விடுவீர் .
திருந்து , வருந்து , இல்லையேல் திருத்தப்படுவாய்  விரைவில்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!!

Read Next

ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *