விளக்கு திருவிழா

Vinkmag ad
பிப்-22 சீனாவின் வரலாற்று புகழ்மிக்க விளக்கு திருவிழா.
வாழ்த்துக் கவிதை.

சீனவிழா வரிசையில் சிங்கார திருநாளாய்
சிரித்தாடி மகிழ்ந்தாடும் சிறப்புமிகு ஒளிவிழா!
ஞானஒளி வீசியே நாடெலாம் மணக்கவே
நாட்டிய கலையோடு நடக்குமொரு திருவிழா!
தானமிடும் பன்பாட்டை தவறாமல் போதித்து
தந்திடும் விருந்தென தனிப்பெரும் ஒருவிழா!
கூனல்பிறை சந்திரனும் கொண்டுவரும் ஒளியென
கூடியே மக்களும் கொண்டாடும் குலவிழா!

ஹான்வம்ச காலத்து அழியாத தீபமாய்
ஆண்டுகள் பலநூறு அடையாளம் கொண்டது!
வான்புகழ் வசந்தவிழா வந்துசென்ற நாட்களில்
வண்ணமய விளக்கென வாழ்த்தினை சிந்துது!
தேன்குழல் கொழுக்கட்டை தென்னகத்து வகைகளும்
திருநாளின் சிறப்பெனவே தித்திக்க மின்னுது!
மீன்வறுவல் இறைச்சியென மேலோர்க்கு படையலும்
மேவிய விளக்குவிழா மேன்மையை சொல்லுது!

வீடுதோறும் விளக்கேற்றி வேண்டியதை நிறைவேற்றி
வினையாவும் களைந்திடும் வெற்றியே தந்திடும்!
கேடுகளும் சூழாமல் காக்கின்ற புத்தரது
கனிமுக பார்வையால் கருணையே வந்திடும்!
நாடுவேறு ஆனலூம் நடைமுறையின் பன்பாடு
நம்தமிழ் சீனமும் நாளுமே ஒன்றிடும்!
தேடுகின்ற நல்வாழ்வு தேசங்கள் தோறுமே
தெய்வவழி ஒன்றென தெளிவாக சொல்லிடும்!

-கண்ணன்சேகர், 9894976159.

Click here to Reply, Reply to all, or Forward

News

Read Previous

தல, வயிற்று வலி, உடல் எடை குறைதல்

Read Next

கத்தாரில் பிப். 26ல் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *