வா நண்பா பகைக்கலாம்!

Vinkmag ad

வா நண்பா பகைக்கலாம்!

 சிகரெட் ஒரு ஆன்மா மீட்டர்

ஒவ்வொருமுறையும் நீ

வாயில்வைத்து புகைக்கும் போது

உன்ஆயுள் குறைவதை காட்டுகிறது!

 

அது விரல் பிடித்து

 உனக்கு நீயே எழுதிக்கொள்ளும்

மரண சாசனம்!

 

அதோபார்! புகை என்னும் பெயரில்

போய்க்கொண்டிருக்கிறது உன்

தவணை உயிர்!

 

போதும் விட்டுவிடு

புகைப்பழக்கம் கொடிது!

 

சிகரெட் எனும் மகுடி ஊதி

மரணப்பாம்பை அழைக்காதே!

 

சிகரம் தொட்டு

புகழ்க் கோடி ஏற்றும் வயதில் ஏன்

சிகரெட் நுனியில்

புகைக்கொடி ஏற்றுகிறாய் ?

 

போர் தொழில் கற்கும்

புலியின் பிள்ளை

உறுமலாம்!

இருமலாமா..!?

 

புகைவிட்டால் தானே

புண்படும் நெஞ்சு

புண்பட்ட நெஞ்சை

புகைஎங்கனம் ஆற்றும்!

 

நினைவில்கொள்!

நீ பற்றவைக்கும் சிகரெட்துண்டு

உன் உடலையும் உள்ளுறுப்பையும்

உருக்குலைக்கப்போகும் செலட்டின் குச்சி!

 

விளங்கிக்கொள்!

மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும்

சிகரெட் பாலம் கட்டுவதாய்

உனக்கு பாடை கட்டுகிறாய்!

 

இனியேனும்

வெளியே செல்லும் மரணத்தை

வீட்டுக்கழைக்கதே!

 

வேண்டாம் விட்டுவிடு!

விரல் கொண்ட உறவை

விரல் கொண்டே வெட்டிவிடு!

                                – அப்துல் வதூத், துபாய் 

News

Read Previous

முதுகுளத்தூர் வியாபாரிகள் நல அறக்கட்டளை 10-ஆம் ஆண்டு விழா

Read Next

மத்தியப்பிரதேச கிராமம் காட்டும் வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *