வாழ்க்கை

Vinkmag ad

வாழ்க்கை

பல்லுக்குள் அகப்பட்ட நாக்கை நீயே
பக்குவமாய்ச் சுழற்றுதற் போன்று வாழ்க்கை
நல்லவைக்கும் தீயவைக்கும் இங்குப் போட்டி
நயமாகப் புரியவைத்தால் கிட்டும் வெற்றி
வில்லுக்குள் நேர்த்தியுடன் நாணைப் பூட்டி
வீரிட்டுப் பாய்ந்துவரும் அம்பு போல
”மல்லுக்கு” நிற்கின்ற மனத்தின் வேட்கை
மதிகொண்டு வென்றிடுவாய் அதனின் போக்கை
கல்லுக்குள் தேரைக்கும் உணவை ஊட்டும்
கர்த்தனவன் பேரருளை உனக்குக் காட்டும்
நில்லாத பூவுலகில் நிலைைக்கும் பேறு
நீயுழைக்கும் அளவுகொண்டு கிடைக்கும் சோறு
சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் வேண்டும்
சொல்வதையே செய்வதற்கு மனமும் தூண்டும்
வல்லவனாய் வளம்பெற்று வாழ்ந்த போதும்
வறியவரைக் கேவலமாய்த் தாழ்த்தி டாதே!

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

News

Read Previous

சுடச்சுட

Read Next

இயக்கமும், உலமாக்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *