சுடச்சுட

Vinkmag ad

இலங்கைக் கவிஞர் நஜ்முல் ஹுஸைன்
அவர்கள் எழுதி முகநூலில் வலம் வரும் ஓர் உருக்கமான உள்ளீடுகள் உள்ளடக்கிய புதுக்கவிதை
====================

சுடச்சுட
~~~
—————

நீ சுட்டாய்
அந்த சங்குகள்
வெண்மையாயின

நீ சுட்டாய்
New Zealand
New Zeal Landடாய்
(Zeal – பேரார்வம்)
தன்னைப்
பிரகடனப்படுத்திக் கொண்டது

நீ சுட்டாய்
அவர்கள்
தலையை மறைத்தார்கள்
உள்ளத்தை திறந்தார்கள்

நீ சுட்டாய்
அந்த மேனிகளில் மட்டுமா
துளைகள் விழுந்தன –
சொர்க்கத்தின்
கதவுகளிலும்தான் –
இலகுவாய்
அந்த ஆத்மாக்களை உள்ளே
இழுத்துக் கொள்ள

இத்தனை ஷுஹதாக்களை
சுவனத்துக்கு அனுப்பி வைத்த
உன்னை
நாளை
அந்த நரகில் போட்டு
சுடுவானா ?
மன்னித்து விடுவானா ?

– என். நஜ்முல் ஹுசைன்

23-03-2019

News

Read Previous

அயல் நாட்டிலிருந்து வரும் பயணிகள் கவனத்திற்கு

Read Next

வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *