வழிவகுத்தல் நல்லதல்ல !

Vinkmag ad

வழிவகுத்தல் நல்லதல்ல !
( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் )

விண்ணதிர மண்ணதிர வெளிப்பட்ட விஞ்ஞானம்
கண்ணெதிரே பலவித்தை காட்டிநிற்கும் விஞ்ஞானம்
எண்ணிநாம் முடிக்குமுன்னம் இயக்கிநிற்கும் விஞ்ஞானம்
மண்ணுலகில் மனிதனது வாழ்வோடு நிற்கிறது !

பார்க்கின்ற இடமெல்லாம் பலநிலையில் விஞ்ஞானம்
பலபேரின் சிந்தனைக்கு மெருகூட்டும் விஞ்ஞானம்
ஆர்ப்பரிக்கும் கடலயை ஆராயும் விஞ்ஞானம்
அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிநிற்கும் விஞ்ஞானம் !

மெஞ்ஞான சிந்தனைகள் விரைவாகப் பரவுதற்கு
விஞ்ஞானம் தானிப்போ வித்தாகி நிற்கிறது
அஞ்ஞானம் கொண்டோரின் அகந்தையைப் போக்குதற்கு
விஞ்ஞானம் ஊடாக மெஞ்ஞானம் விரைகிறது !

கணனியெனும் சாதனத்தால் கருத்துக்கள் விரிகிறது
நினைவிலுள்ள விஷயமெல்லாம் நினைத்தவுடன் செல்கிறது
உலகிலுள்ள மனிதரிடம் ஓர்நொடியில் கருத்தையெல்லாம்
உவப்புடனே கொண்டுசெல உதவுதிங்கே கணனியிப்போ !

மேலோங்கும் விஞ்ஞானம் விந்தைபல புரிந்தாலும்
நாமதனை நன்குணர்ந்து நல்லவழி காட்டவேண்டும்
வீணான பாதைதனில் விஞ்ஞானம் போவதற்கு
வாழ்நாளில் நாமென்றும் வழிவகுத்தல் நல்லதல்ல !

பணம்பண்ணும் நோக்கமொடு பலபேரும் திரிகின்றார்
பிணம்விற்றும் காசாக்கும் பித்தருமே வருகின்றார்
தினம்தினமும் ஆராய்ச்சி தீயவரின் வசமானால்
நமதருமை விஞ்ஞானம் நலனெல்லாம் இழந்துநிற்கும் !

News

Read Previous

பன்றிக்காய்ச்சல் பரவுவது எப்படி?: என்ன செய்ய வேண்டும்-என்ன செய்யக்கூடாது?

Read Next

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *