வன்முறை தவிர்ப்போம்

Vinkmag ad
வன்முறை தவிர்ப்போம் 
ரத்தம் , ரத்தம் , எங்கும் ரத்தம்
சடலம் .சடலம் , எங்கும் சடலம்
நன்முறையில் வாழவேண்டிய உயிர்களெல்லாம்
வன்முறையால்  வாழ்விழக்கும் கொடுமை .
புனிதப்போர்கள் என்ற பெயரில்
மனித உயிர்களை எடுத்தல் என்ன ஞாயம் .
மதத் துவேஷத்தால் மனிதவெடிகுண்டுகள்
மதத்தின் பெயரால் உயிர்களை  வதைத்தல்
மதம் படித்தவர்களா இவர்கள்
மதம் பிடித்தவர்கள் அன்றோ .
சத்ருக்களை வதைத்தல் ஞாயம்
சகோதரர்களையே  வதைத்தல் என்ன நியாயம் .
குற்றம் புரிவோரைக் கொன்றால் கூட பரவாயில்லை
குழந்தைகளைக் கூட கொல்லுதல் என்ன ஞாயம் .
கருணையின் வடிவாய் இருக்க வேண்டிய பெண்டிரும்
கையில் துப்பாக்கியுடன் அலைவதென்ன ஞாயம்
இனம் மாறிக் காதலித்தால் கௌரவக் கொலை .
இறைச்சி சாப்பிட்டதாய்க் கூறி இன்னொரு படுகொலை .
எழுத்தாளர்கள்  மீது மைவீசித் தாக்குதல்
இழந்து விட்டோம் நாம் மத  சகிப்புத் தன்மையை
இழந்துவிட்டோம் நாம்  தேசிய உணர்வை .
எந்த மதமும்  ஆதரிக்காத  தீவிரவாதத்தை
எந்த மதமும்  ஆதரிக்காத  மத துவேஷத்தை
எந்த மதமும்   ஆதரிக்காத இனப்படுகொலைகளை
எந்த மதமும் போதிக்காத வன்முறைகளை
என்று  கைவிடுகிறோமோ  , என்று குறைகிறதோ
என்று அகிம்சையும் , சமத்துவமும் , அன்பும் நம்மை ஆள்கிறதோ
அன்றுதான் உலகில்  அமைதி நிலவும் .
அன்றுதான் உலகம் வளர்ச்சி அடையும்.
இத்தரையில் ஜனித்த உயிரெலாம்
நித்திரை கலைந்தெழுதல் நிச்சயமில்லை -ஆகவே
நித்திலத்தில் உள்ளவரை
நித்திய கடமைகள்  தவறாது செய்குவீர்.
புத்தர் , ஏசு , நபிகள் நாயகம் ,
சித்தர்கள் , சீலர்கள் , மகான்களெல்லாம்
புத்தியிலுரைக்கச் சொன்னது போல
சத்தியம் , அஹிம்சை , அன்பு வழி நடப்போம் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

மெழுகாய் உருகும் உள்ளம் !

Read Next

தமிழ்த்தாயின் இஸ்லாமியப் புதல்வர்கள்

Leave a Reply

Your email address will not be published.