ரமலான் மாதத்தின் சிறப்புகள்

Vinkmag ad

#ரமலான்_மாதத்தின் சிறப்புகள்

அருள்வளம் நிறைந்த
நோன்பின்  மாதம்….
ஆண்டவனின் வேதம்           இறங்கிய  மாதம்….
இறையருள் மிக்க
புனித மாதம்….
ரமலான் மாதம்!….
ரமலான் மாதம்!….
ரமலான் மாதம்!…
இறைவனது
ரஹ்மத்தின் மாதம்!….

ஏழைகளின் பசியைப்
போக்கும் மாதம்….
இல்லோருக்கு தந்திடும்
ஈகையின் மாதம்……
படைத்தவன் அருளைப்
பெற்றிடும் மாதம்….
ரமலான் மாதம்!….
ரமலான் மாதம்!!….
ரமலான் மாதம்!….
இறைவனது
ரஹ்மத்தின் மாதம்!….

நன்மைகளை நாடிச்
செய்யும் மாதம்…..
தீமைகளை வெறுத்து
ஒதுக்கும் மாதம்…..
தினமும்  திருக்குர்ஆனை
ஓதிடும் மாதம்….
ரமலான் மாதம்!…. புனித
ரமலான் மாதம்!!…
ரமலான் யாதம்!…
இறைவனது
ரஹ்மத்தின் மாதம்!…

சொர்க்க வாசல்
திறக்கும் மாதம்….
நரக வாசல்
மூடும் மாதம்…..
கருணை கிடைத்திடும்
கண்ணிய மாதம்!…
ரமலான் மாதம்!…. புனித
ரமலான் மாதம்….
ரமலான் மாதம்!…
இறைவனது
ரஹ்மத்தின் மாதம்!….

புனித லைலத்துல்கத்ர்
வருகின்ற மாதம்….
இரவெல்லாம்
இறைவனை
துதித்திடும் மாதம்….
பாவமன்னிப்பு கிடைத்திடும் அருட்கொடை மாதம்….
ரமலான் மாதம்!…. புனித
ரமலான் மாதம்!!…
ரமலான் மாதம்!…
இறைவனது
ரஹ்மத்தின் மாதம்!…

வரியவர்ளுக்கு வாரி
வழங்கிடும் மாதம்….
மனமுவந்து தர்மங்கள்
செய்திடும் மாதம்…
ரய்யான் வழியில்
சொர்க்கம்
அடைந்திடும் மாதம்
ரமலான் மாதம்!… புனித
ரமலான் மாதம்!!…
ரமலான் மாதம்!…
இறைவனது ரஹ்மத்தின் மாதம்!…
——
கவியாக்கம்
முனைவர் ஆ.முகமது முகைதீன், துபாய்

News

Read Previous

கைகழுவல்

Read Next

காத்திருக்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *