ரமலான் நோன்பு

Vinkmag ad
ரமலான் நோன்பு – அது
தந்திடும் மாண்பு.


அல்லாவின் அருளால் அகிலன்தன்னில்
எல்லா வளமும் நிறைந்தவரெல்லாம்
இல்லாதவர்க்கு ஈந்து மகிழ
நல்லதோர் காலம் ரமலான் தானே.

ரமலான் நோன்பு – அது தந்திடும் மாண்பு.


காலையிலிருந்து  உபவாசமிருந்து

காலம் தவறாது தொழுகை செய்து

மாலையில் நோன்பு  திறக்கும் பொழுது
மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பதும்

ரமலான் நோன்பு – அது தந்திடும் மாண்பு.


அல்லா  அவர்கள் ஆணையின் படியே
அண்ணல் நபிகள் காட்டிய வழியில்
எல்லா உயிர்க்கும் தோழமைகாட்டி
நல்லவராக வாழச் செய்வதும் 

இஸ்லாமியர்கள் அனைவரும் வேறு
எந்த மதத்தவராயினும் அவரை
அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறி
அன்பைக் காட்டுதல் அருமையன்றோ. 
ரமலான் நோன்பு – அது தந்திடும் மாண்பு.
 

 திருக் குர் –  ஆன்  தன்னை தினமும் ஓதி
திசை தனைத்   தொழுது   பிறை தனைக் கண்டு
 மறையதன்  வழியில் மனிதனாய் வாழ்ந்தால்

குறையிலாதிருக்கும்  குவலயம் தானே.

ரமலான் நோன்பு – அது தந்திடும் மாண்பு.

அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

 14.07.2015

rajamsethu@gmail.com

 

News

Read Previous

கொசு – நாவல்

Read Next

INDIACSR Community Initiative Award

Leave a Reply

Your email address will not be published.