யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி

Vinkmag ad

யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால்
தேன்குடித்த  வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே
யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந்      தபள்ளி
யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி
 
காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை கண்டேனே
சாதிமத பேதமற்ற சமத்துவமேக் கொண்டேனே
ஆதியிறை ஞானமுள்ள ஆசானைப் பெற்றேனே
நீதிக்கதைகள் மூலம்தான் நெறிமுறைகள் கற்றேனே
 
தமிழ்வழியிற் கற்றாலும் தரமான ஆங்கிலமும்
அமிழ்தெனவே ஊட்டியதால் அயல்நாட்டிற் பிழைக்கின்றோம்
இமைகள்தான் கண்களையே இயல்பாகக் காப்பதுபோல்
சுமையாகக் கருதாமல் சுகமாகக் கற்பிக்கும்
 
தியாகமுள்ள ஆசான்கள் திகழ்கின்ற பள்ளியாகி
வியாபார நோக்கங்கள் விட்டொழித்   தெல்லார்க்கும்
நியாயமானக் கல்விதனை நிலைநிறுத்தும் நிர்வாகம்
அயராது  ழைக்கின்ற அம்மையார் தலைமையினால்
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி: 00971-50-8351499

News

Read Previous

அரும் ம‌ல‌ர் வாச‌ வாழ்த்துக்க‌ள்!

Read Next

ரமளான் – ஒரு பயிற்சிப் பட்டறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *