மெட்டி….

Vinkmag ad

மெட்டி….

பெண்மைக்கு
மறுப்பெயர் மென்மை
பெண்ணின்
மென்மையில்
அவளின் கர்ப்பப்பையின் தன்மை
அதினிலும் மேன்மை

அந்த கர்ப்பப்பையைக்
காக்கும் மெட்டிக்கு
என்னொரு மகத்துவம்

மெட்டி….

மென்மையின் மேன்மையில்
புதியதொரு உறவை
வார்த்தெடுக்கும்
தாயின் கருவறையை
காத்து நிற்குது அது

மெட்டி….

மணமேடையில்
மணாளன் அவன்
கை விரல்கள் பட
மங்கையவளின்
கால் விரல்கள் அணைத்துக் கொண்டு
அழகுக் கொள்ளுது

மெட்டி….

அதன் போது
மங்கைக்கு அது
அணிகலன் மட்டுமல்ல
அவளின் தாய்மை பேற்றுக்கு
உத்தரவாதம் தரும் அரணாய் அது எப்போதும்

✍🏽இராம.ஜெயபாலன்

News

Read Previous

தோல்வி அல்ல

Read Next

சலனப்பட்ட மனம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *