சலனப்பட்ட மனம்..

Vinkmag ad

’ சலனப்பட்ட மனம்..”
…………………………….

சிறுகல்லை துாக்கி போட்டால் கண்ணாடி சிதறி விடும். அதைப் போல் மனதில் சிறு சலனம் ஏற்பட்டால் எடுத்த செயல் தோல்வியில்தான் முடியம்..

சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோயோ இருக்கிறது..ஆனால் ஒருவராலும் அதன் அருகில் போக முடியாது.

ஆனால் அந்த பெரிய சூரியனை கிணற்று நீரில் காண முடியும். கிணற்றுக்குள் அந்த பிம்பத்தை காண முடியும்.

சலனம் இல்லாத கிணற்றில். சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாகத் தெரியும்.

அதற்கு காரணம் கிணற்றில் சலனம் இல்லை. அதனால் சூரியனின் பிம்பம் மிக தெளிவாகத் தெரிகிறதுஅது போலத்தான் நம் உள்ளமும்..

எந்தவித சலனம் இல்லாமல் இருந்தால்தான் நாம் எண்ணிய குறிக்ககோளை எளிதில் அடையலாம்..

ஓட்டப்பந்தயம் ஒன்றில் இருவர் மட்டுமே கலந்து பங்கேற்றனர். தொடக்கத்தில் இருவரும் சமமாக ஓடினர்.

ஒரு கட்டத்தில் ஒருவன் களைப்பு அடைந்தான். ஆனால் பந்தயத்தில் தோற்பதை அவன் விரும்ப வில்லை.

அதனால் மற்றவனை திசை திருப்பும் விதமாக தங்க ஆப்பிள் ஒன்றை உருட்டி விட்டான். அதை எடுக்க விரும்பிய மற்றவன் கவனம் தடுமாறியது..

இதற்கிடையில் தங்க ஆப்பிளை உருட்டி விட்டவன் வேகமாக ஓடி எளிதில் இலக்கை அடைந்தான்..

ஆம்.,நண்பர்களே..,

மனித வாழ்வும் ஓட்டப்பந்தயம் போலத்தான்.. சலனத்திற்கு இடம் கொடுத்தால்,நம் எதிர்கால முன்னேற்றம் தடைபடும். அதனால் நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது..

News

Read Previous

மெட்டி….

Read Next

டாய்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *