மறத்தமிழே மறுக்காதே ………………

Vinkmag ad

“மறத்தமிழே மறுக்காதே – மறந்துமெனை வெறுக்காதே”

===============================================

முற்றத்து   முகப்பில் முழுநிலா முகிழ்த்தது போல்
முத்தமிழே இங்கு  முன்னின்று  முழங்குதலாய்
நற்றவத்தால் உதித்த நளினத்தின் வெளிப்பாடாய்
சற்றேனும் சரிவுறா கும்பமது(வூறு)ம் குமுதவாய்
கற்றவர் களிப்புறும் கவிதைவரிப் பு(து)த்தகமாய்
உற்றவர் உவகைமேவும் உயிர்வடிவில் சிலையாளே!

பற்றேறும் பார்த்தவருக்கு பசியெடுக்கும் பருவத்திற்கு
பொன்னேறும் மேனியிலே புருவமது வில்லினிலே
கண்னேறும் கயலாளே கணையோடும் முன்னாளே
விண்ணேறும் வானவில்லே வளைந்தாடும் நாணலதே!!

கள்ளூறும் பா(ர்)வையிலே காணவில்லை இடையதுவே!
என்னூறும் காதலதை எடுத்தூறும் எழுதுகோலாய்
உன்னுள்ளும் உயிர்த்தழுவல் உவகையுடன் உவந்தளித்தால்
சிறகடித்துப் பறந்திடுவேன் சிவகங்கைச் சீமைவரை!!!
மறத்தமிழே மறுக்காதே; மறந்துமெனை வெறுக்காதே:

அறந்தை – கொடுகவயலார்
ஏ. பாலசுப்பிரமணியபாண்டியன் (எ) ஏ. பாலா.

News

Read Previous

பெங்களூரில் ஜெயகாந்தன் நினைவுக் கூட்டம்

Read Next

மறுபடிநீ வரவேண்டும் !

Leave a Reply

Your email address will not be published.