போதிமர தத்துவங்கள்

Vinkmag ad

போதிமர தத்துவங்கள்
——————————————
(அமெரிக்க சாலைகளில் பயணித்த போது கண்ட காட்சிகள் ஏற்படுத்திய தாக்கங்கள் )
அமெரிக்க மண்ணை
அலங்கரித்த மரங்கள்
அழகிய வண்ண இலைகளாய்
அதிசயமாய் பூத்திருந்தன

பூக்களில் கண்ட வண்ணங்கள்
புதுமையாய் இலைகளிலும்
இலைகள் தான் மலர்களோ
இது பூமியின் வானவில் தானோ

சாலையோரம் சாமரம் வீசும்
சரக்கொன்றை மரங்கள் வாசம் வீசும் காட்சிகளின் சாட்சியாய் அது
கால மாற்றங்களைச் சொல்லும்

பச்சை நிற இலைகள் பச்சிளம்
பருவத்தை பறைசாற்றும்
கதிர் பட்டு பொன்னாய் மின்னியவை
கவலையற்ற விடலையை நினைவூட்டும்

இரத்த சிவப்பு நிற இலைகள்
இளமையின் வலிமை சொல்லும்
இள மஞ்சள் நிற இலைகள்
இளநரை முதுமையைச் சொல்லும்

இளவேனிற் பருவம் முடிந்து
இலையுதிர் காலம் தொடங்கும்
இலைகள் உதிர்ந்து சருகாகும்
இருப்பவர் பலரும் விடைபெறுவர்

வசந்தம் மீண்டும் வரும் என வயோதிகமும்
வான்பார்த்த கிளைகளும் ஏங்கும்
பனித்தூறல்கள் வந்து மெல்ல தூவும்
பருவகால மாற்றமும் வந்து தழுவும்

பருவ நிலைகளின் மாற்றம்
பல பாடங்களை போதிக்கும். மரங்களுக்கு மட்டுமா மாற்றங்கள்
மனிதருக்கும் கூட அது தானே
கவின் முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

பாரதியிடம் கேட்டேன்!

Read Next

கல்லறையில் துயிலும் கள்ளிப் பூக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *