புனித ரமலான் நோன்பு !

Vinkmag ad

புனித ரமலான் நோன்பு !

மனித மாண்பின் மகிழ்வு !

 

ஈமானோர் தீனோர் – ஈது

தேடிப்பெற்ற அருட்கொடை !

 

 

ஆராய்ந்து நாட்கள் சீராய்ந்து நோன்பை

நேராய்ந்து நோற்றோர் – நெறிநிலைப் பெற்றோர் !

கூராய்ந்து அறிவு கொள்கையில் வாழ்ந்து

கோமான் நபிகள் ஈமான் தழைக்கலானார் !

 

ரமளான் என்னும் புனித மாதத்தில்

ரஹ்மத் வந்திடுமே – அதன்

அமலான நோன்பு நோற்பதால் – மாண்பு

ஆனந்தம் வந்திடுமே – தீனின்

ஆன்மீகம் செழித்திடுமே !

நாற்பதில் ஒன்றினை ஜக்காத்தாய் தந்திட

நாடிடும் நோன்பாகும் – அதை

ஏற்பவர் நெஞ்சம் இனித்திடும் – தீன்

வழியின் பிறப்பாகும் !

 

எளியார் வாழ்வை வலியோர் உணர்ந்திட

ஏற்ற செயலாகும் – நோன்பு

தெளிவான வாழ்வை பொலிவான உயர்வை

தேடிடும் சிறப்பாகும் – உடல்

நாடிடும் நலமாகும் !

 

தராவீஹ் என்னும் தார்மீகத் தொழுகையின்

தத்துவம் நோன்பாகும் – அது

தந்திடும் ஆனந்தம் வந்திடும் ஆன்மீகம்

தவழ்வது நிகழ்வாகும் – அது

தானவன் மகிழ்வாகும் !

 

லைலத்துல் கதிர் எனும் லெளகீக இரவில்

லயித்திடும் மணமாகும் – அது

ஆயிரம் திங்களின் பிறப்பின் நிறைவை

அளிப்பது அருளாகும் – அது

அருங்குணப் பொருளாகும் !

 

ஷவ்வால் இளம் பிறை செவ்வானில் தெரிவது

சம்பூர்ண சிறப்பாகும் – அதில்

யெளவனம் இலங்கும் எழிலார் பெருநாள்

இணைவது மகிழ்வாகும் – வாழ்வில்

இனித்திடும் நிகழ்வாகும் !

 

 

-தமிழருவி கவிமாமணி அபிவிருத்தீஸ்வரம்

கவிநேசன்

 

நன்றி : மணிச்சுடர்

12/13 ஆகஸ்ட் 2012

 

News

Read Previous

எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..

Read Next

உவமைகளில் உவமை இல்லா நபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *