புத்தாண்டு வாழ்த்துக்கள்

Vinkmag ad

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அல்லாவுக்குகந்த நாளாம்
        வெள்ளியில் பிறக்கும் ஆண்டில்
அல்லாவின் கருணையாலே
         அனைவருக்கும் ,அனைத்துமே
நல்லபடி நடக்க   வேண்டும் .
         நன்மையே விளையவேண்டும்
எல்லா வளமும் சேர்ந்து
       ஏற்றமாய் வாழவேண்டும் .
பொல்லாத எண்ணமெல்லாம்
       பூமியில் புதையவேண்டும்
இல்லாமை நீங்க வேண்டும்
       இறை பக்தி ஓங்கவேண்டும்.
கொல்லாமை  நிலவ வேண்டும்
       குற்றங்கள் குறையவேண்டும் .
எல்லா மதத்தினரும்
       இணக்கமாய் வாழவேண்டும்
நல்லோர்கள் தலைமை தாங்கி
        நல்லாட்சி புரியவேண்டும் .
வெள்ளமும் ,வெயிலும்  நமக்கு
        வேண்டிய மட்டுமே வேண்டும் – நல்ல
உள்ளங்கள்  உதவியாலே
        உறுபசி  நீங்க வேண்டும்
அறுமுறை  தொழுது குர்-ஆன்
        வழிமுறை வாழ வேண்டும்
அறவழி  வாழ வேண்டும்
         அமைதியே நிலவ வேண்டும்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

மனிதநேயம் பிறக்கட்டும்

Read Next

சிறப்புடனே வந்திடுவாய் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *