புத்தக தினம் கவிதை

Vinkmag ad

நூலகத்தில் உலகைக் கண்டேன் – இந்த

****நீளுலகில் நூலகத்தைக் கண்டேன்

பாலகனாய் வாழ்ந்த போதும் – என்றும்

****படிப்பதில் இன்பம் கொண்டேன்

 

சிற்றின்ப போதை பாலினத்தில்- இங்கு

****சிறப்பான போதை நூலினத்தில்

கற்றலில் இனபம் ஏற்றியது – அதுவே

****காதலாய் நூலினத்தில் மாற்றியது

 

மூடிக் கிடந்தது நூலேடு! – கை

.. ****மெதுவாய்த் திறக்க முகங்கண்டேன்!

தேடித் தவித்தவன் பாலையிலே – ஓர்

****.தெள்ளிய . நீர்ச்சுனை கண்டதைப்போல்!

 

 

எத்தனை வண்ணம் நூலினத்தில்! – அவைகள்

.. *****இதுவரை ஏனெனைத் தீண்டவிலை?

புத்தம் புதிதாய் இன்றிருந்தும் – நிலை

.. ****புதிதிலை நித்தம் பரிச்சயமே!

 

 

சொல்லால் சுகம்பல ஊட்டிடவும் – புதுச்

.. ***சுருதியை நெஞ்சினில் மீட்டிடவும்

எல்லாம் முடித்தேன் எனும்போதும் – வே(று)

.. ****எதையோ தினந்தினம் காட்டிடவும்

 

 

விரலால் வரைந்தேன் நூலுடலில் – பக்கம்

.. ****விதவித மாக நெளிந்திடவே

குரலால் மொழிந்தேன் நூல்மொழியை! – கை

.. *****கொண்டு அணைத்தேன் நூலடலை

 

 

கண்ணால் நூலுடல் மேய்ந்திடினும் – நூல்

..*** காட்டும் அதிசயம் தீரவில்லை!

எண்ணா துறங்கும் கணமாயும் – எனக்கு

.. ****இன்பம் தருவன நூற்களே!

 

 

நூலோ அதன்பொருள் நுண்ணியதோ? – நான்

.. ***நுணங்கிடும் போதது நொய்ந்திடுமோ?

பாலோ தேனோ ஈடில்லை – இரவு

..**** பகலாய் பரவசப் படுத்திடுமோ?

 

 

சொற்கள் கற்பிக்கும் மௌனமவள்! – புதுச்

.. ****சுவையை கற்பதில் ஏற்றுபவள்!

பற்கள் பதியா தொருநிலையில் – இதழ்

..**** பதிக்கும் கலைபோல் பதிப்பவள்!

 

 

கண்டும் கேட்டும் உண்டுயிர்த்தும் – அவள்

.. ****கலையா எழிலை உற்றறிந்தும்

அண்டி அவளின் அரவணைப்பில் – மனம்

.. ****ஆழ்ந்து கிடக்க அலைபாயும்!

 

 

என்னவள்! நான்தான் இதழ்ச்சுகிப்பேன்! – முறை

.. ****எத்தனை ஆயும் இனிப்பெனக்கே!

பொன்னவள் நெஞ்சில் பெயரெழுதி – என்

.. ****பொறுப்பில் புதிதாய்த் துகில்கொடுத்தேன்!

 

 

“அதிரை கவியன்பன்” கலாம், அபுதாபி

 

 

முகவரி:

 

KALAM SHAICK ABDUL KADER

ACCOUNTANT

GRANITE CONSTRUCTION COMPANY

POB # 842

ABU DHABI, UAE

MOBILE 0508351499

 

 

 

 

 KALAM
“ABUDHABI , UAE

http://www.kalaamkathir.com

http://gardenofpoem.blogspot.ae/

 

News

Read Previous

மரக்கடை ஏ.எம். எம். முஹம்மது சாலிஹ் வஃபாத்து

Read Next

நேபாளம்

Leave a Reply

Your email address will not be published.