புதிய பெண்ணே புறப்படு

Vinkmag ad

மகளிர் தின வாழ்த்துக்கள்

புதிய பெண்ணே புறப்படு

மனு சொன்ன இழிவும்
மதம் சொன்ன ஈனமும்
வதம் செய்யும் (மனித)மிருகமும்
அதம் செய்ய புறப்படு..!!!

அடக்கம் என்பார் அடிமையாக்க
ஒழுக்கம் என்பார் ஒழித்துக்கட்ட..!!
கயமை ஒழிய புறப்படு- அவர் முகத்தில்
காறி உமிழ புறப்படு…!!!

பெண்மை சொல்லாமல்
ஆணுக்கேது ஆண்மை??
மனைவி இல்லாமல்
மனிதனுக்கேது பெருமை???

வெஞ்சினும் கொஞ்சினும்
மிஞ்சினும், வஞ்சியவள்-கொஞ்சி
புஞ்செயினும் புருஷன் எனும் மடமை தனைமாற்ற
நஞ்சையேனும் கலந்துவிடு நாசமாய் போகட்டும் …!!

பெண்ணில்லை என்றால்
மண்ணில்லை புரிய வைத்திடு..!
கண்ணியப்பெண்ணாய் கல்விகொண்டு
பெண்ணியத்திற்கு பெருமை சேர்த்திடு..!!

கமல. அருள் குமார்..

News

Read Previous

பட்டாம்பூச்சி போல அவள்..

Read Next

பெரியார்

Leave a Reply

Your email address will not be published.