பாரதியின் “குயில் பாட்டு”

Vinkmag ad
பாரதியின் “குயில் பாட்டு”  பாடுவோம்  – 9
 

 
 
 
================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -9
குயிலும் குரங்கும்!
================================================
 
அருளின் குரல் வரிகள்:-
•••••••••••••••••••••••••••••••••••
 

சென்ற வாரம், கலைமாமணி சூரியபிரகாஷ் பாடிய அந்த உருக்கமான பாடலின் இராகம் என்ன என்று என்னிடம் பலர் கேட்டனர். கலைமாமணி சூரிய பிரகாஷே தானே புனைந்த சூரிய வசந்தம் என்ற இராகத்தில் மிக மிடுக்காக அவர் பாடியதும், அவருடைய தோற்றப் பொலிவும், அவர் பாடிய அந்த நயத்தைக் கேட்டு உலகமே சுருண்டது என்று சொன்னால் மிகையாகாது.


முன்பு பார்த்த மரத்தில் இப்போது அந்தக் குயிலைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்து கவலைப்படுகிறார் கவிஞர். குயிலைக் காணாமல் புலம்புகிறார். ஏ! பெண் குயிலே என்னை வஞ்சித்துவிட்டாயே. மன்மதனின் பொய்மை வடிவமே என தன் விதியை நொந்து இந்த உலகமே பாழாகிவிட்டதாக புலம்புகிறார். மேலே பார்க்கிறார். அவர் கண்ட காட்சி, அவரைப் பித்தனாக்கியது. ஆ! என்ன இது? பெண்ணால் அறிவிழக்கும் பேதைகளே, காதலைப் புகழ்ந்து பாடும் மேதைகளே! பெண்களே! இங்கே பாருங்கள். என்னைக் காதலிப்பதாக அழுத அந்த நீலிக்குயில், இப்போது ஒரு ஆண் குரங்குடன் உட்கார்ந்து ஏதே நேசமாய் கெஞ்சிக் கொண்டிருக்கிறதே என்று கதறுகிறார். பாரதியாருக்கு கோபம் வந்தது. எது நல்லது, எது கெட்டது, என்ன செய்வது என புரியாமல் இருவரையும் கொன்றுவிட உடைவாளை எடுக்க ஒரு கணம் யோசித்தார்.

அவர்களைக் கொள்வதற்கு முன்னே அந்தக் கள்ளத்தனமான இணையர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள விழைந்தார். அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் ஒரு மரத்தின் கீழ் நின்று ஒளிந்து நின்று கேட்கலானார்.

பெண் குயில் பேசிக்கொண்டிருந்தது. வானரமே! என் அழகிய ஆண் மகனே! எத்தனை பிறவி எடுத்தாலும் உன் அழகை விஞ்ச முடியுமோ! இந்த மனிதர்கள் எவ்வளவு தவறாக தங்களை உலகின் தலைவர்களாக எண்ணுகிறார்கள். ஒரு வேலை, வீடு, கோயில், நகரம் என அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசு, மக்கள் குடிவாழ்வு என்று வேண்டுமானால் அவர்கள் உயர்ந்துள்ளதாக மமதை கொள்ளலாம். ஆனால், குரங்கு இனத்திற்கு மனிதர்கள் நிகராக முடியுமா? அவர்களுக்கு குரங்கினைப்போல் பட்டு முடியால் மேனி முழுவதும் மூடி இருக்குமா? அவர்களின் மழித்த உடலை எட்டு துணி கொண்டு மறைத்தாலும் தாடி, மீசை வளர்த்துக் கொண்டு குரங்குக்கு போட்டியாக ஒப்பனை செய்து கொண்டாலும், உங்களைப் போல் வேகமாக ஓடி, ஆடி குதிக்க முடியுமா? அப்படியே குதித்தாலும் கோபுரத்தில் ஏறுவதற்கு மனிதருக்கு ஏணி தேவையே.

உங்களைப் போல் மனிதன் எத்தனையோ செய்ய எத்தனித்தாலும் வேகமாக பாய முடியுமா? சரி விடுங்கள்… அவர்களுக்கு உங்களைப்போல் அழகான வால் உண்டா? தலைப்பாகையில் வேண்டுமானால் அவர்கள் வால் வைத்துக் கொள்ளலாம்… இடுப்பில் இருக்கத் துணி இறுக்கிக்கொண்டிருக்கலாம். இவையெல்லாம் நீங்கள் குதித்து எழுகையில் வீறு கொண்ட வாலுக்கு சமமாகுமா?

இந்த குரங்குக் கூட்டத்தில் என் கண்மணியால் நீ அமைந்தாய். உருவத்தில் சிறிய தாழ்வான இந்தப் பறவையாய் நான் பிறந்திருந்தாலும், முன் செய்த தவத்தினால், தங்களின் காதல், அன்பு பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தலைவரே! தங்களின் மேல் கொண்ட ஆவலினால், நான் பாடுகிறேன்… நீங்கள் கேளுங்கள்…. என சொல்லிக் கொண்டு இருந்ததை கவிஞர் கேட்கிறார். ஏதோ ஒரு திறம் வந்ததால், குயிலின் பேச்சும், குரங்கின் ஒலியும் புலவருக்கு இப்போது புரிந்து வருகிறது. இப்போது, பாரதியாருக்கு அந்த நேசக் குயில், நீசக் குயிலாக தெரிகிறது. அதன் அழகான குரல், இப்போது அனலாய் உள்ளது. குயிலோ, குரங்கினைப் பார்த்து, குதுகலமாய் பாடிக்கொண்டிருக்கிறது. அதே பாடல்,

காதல் காதல் காதல் – காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.
இசையை விலங்கறியும், மழலை அறியும், பாம்பும் கேட்டு படமெடுக்கம் என்றெல்லாம் பசப்பு மொழியில் பாட, குரங்கு மதிமயங்கி, வெறி கொண்டு தாவிக் குதிக்கிறது, தாளம் போடுகிறது.

உருகுதே, ஆகா உருகுதே
ஆவி உருகுதே
என கண்ணைச் சிமிட்டுகிறது. மண்ணை வாரி இறைக்கிறது. ஆசைக் குயிலே, என் தேவதையே, உன்மேல் நானும் காதல் கொண்டுவிட்டேன். எனக்காக காதல் இல்லையேல் இறந்துவிடுவதாக கூறினாயே உன்னைப் பிரிய மனம் வருமா? அருகில் வா. உனக்கொரு ஆசை முத்தம் தருகிறேன் என காதல் மொழி பேசுவதை கவிஞர் கேட்டு கொதித்தெழுகிறார். கைவாளை எடுத்து குரங்கின் மேல் வீச, கனவா அல்லது நனவா? குரங்கின் நல்ல நேரம் வாளுக்குத் தப்பி முகத்தைச் சுளித்துக் காட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறது. அந்த மாயக்காரி கருங்குயிலும் எங்கோ மறைந்துவிடுகிறது. அந்த சோலையில், அனைத்து பறவைகளும் மொத்தமாய் ஒலியெழுப்ப மேலே என்ன செய்வது என புரியாது தட்டித் தடுமாறுகிறார் பாரதியார். எட்டி எட்டி தேடுகிறார். அந்த குட்டிப் பிசாசு குயில், கும்மிருட்டில் மறைந்துவிடுகிறது.

O treachery, weak womanhood
O false love god, O heart the source of all the ills of man
O ruinous world how can I tell
That which I saw,
Fond men caught in the spell
Of maddening womankind,O hear
The treacherous Koel with tears
A trembling sat on the bough,
Ah,now one hears her sighs and words of love to a monkey by
Does good or evil, a sense of virtue high
Prevail,forthwith to smite her and her lover
I laid my hand on sword,but fond to hear
Her tale of love again,I his by a tree and listened.
Said koel ro the monkey free,
O lover beautiful without compare
Whatsoever life the weaker sex doth bear
O noble lord,could she escape the charm
Is love to be rebuffed and suffer harm
Man in his pride does think himself the king of gods creation.
Temples,cities,sprang from his hands.
In sovereignty and caste and creed
And things as these,he might be great,
But need he be told he could not ever aspire to reach
The height of beauty of the form and speech and binding graces.
Let him try as best he can
And in fold on fold of clothes full dressed
Can he excel thee in thy silken hair
Let shave his face as smooth he can and fair
To thee surpass and drink his fill with friends
And dance and leap and for the help it lends
The ladder scale and climb pagodas high
Of no avail are these attempts to vie with thee,for where to seek the tail they lack
Could loin cloth with thy tail compare
At back of hood through slips a rag how could it aid
A speedy leap,as tail that never failed
Thy beauteous tail god given
With graceful look and vegetarian to the core
Thou could not brook
Compare with any other on earth
I seek rare gem of the race
The love a bird all meek
A beggar bird that by the goodly act of former birth aspiring for thy shaft of love
I sing love bidden,hear, O hear
By some strange accident, perchance of a year
Gone by ,I knew koels amorous talk to the monkey in the language of that stock

News

Read Previous

ஆமையைத் தோற்கடிக்கும் மசூதி இடிப்பு வழக்கு

Read Next

சுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *