பாபர் மஸ்ஜித்

Vinkmag ad

பாபரி மசூதி

 

 

 

 

 

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

 

 

  • அது டிசம்பர்

ஆறாம் நாள்

ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று இரண்டு!

அப்போது நான் படித்துக் கொண்டிருந்தது

ஆறாம் வகுப்பு!

அகவை எனக்கு பன்னிரண்டு!

 

  • இந்தியாவில்

புகழ் மிக்க வரலாற்று சின்னங்கள்

கட்டப் பட்டிருந்ததை

அதுவரை பதிவு செய்த வரலாறு

முதன் முதலாய்

ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டிடம்

இடிக்கப் பட்டதை

அன்று கண்ணீரோடு பதிவு செய்தது !

 

  • ஆம்

மதவெறி கோடறி பிடித்தது!

அது

பாபரி மசூதியை இடித்தது !

 

  • ஆங்கிலேயரால் மண்ணில்

பிளவுப் படுத்தப் பட்ட தேசம்

ஆரியரால் தேச மக்கள் மனங்களில்

பிளவுப் படுத்தப் பட்டது !

 

  • இராமர் பிறந்த இடத்தில்

கோயில் கட்ட புறப்பட வில்லை!

இராமரின் பெயரால்

கொலை செய்யப் புறப் பட்டார்கள்!

 

  • பாவிகளால்

மசூதி இடிக்கப் பட்டது !

அப்பாவிகள்

பலரின் ரத்தம் குடிக்கப் பட்டது!

 

  • ராமர் கோயில் இடித்தது

பாபர் என்று

கட்டுக் கதை விடுகிறார்கள் !

ஆனால்

பாபர் மசூதி இடித்தது

பஜ்ரங்தள் ,மற்றும் இந்துத்துவாக்கள்

காணொளியே இருக்கிறது!

கண்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்!

 

  • சட்டப் பஞ்சாயத்தே

கட்டப் பஞ்சாயத்து ஆனது!

ஆக்கிரமிப்பு செய்தவனுக்கு நிலம் சொந்தம்

தீர்ப்பளிக்கப் பட்டது!

 

  • அகழ்வாராய்ச்சிகளும்

அனைத்து சாட்சிகளும்

அங்கே தூக்கி வீசப் பட்டது !

அயோத்தியில் மசூதி இடம்தான்

“ராமர் பிறந்தது “

நம்பிக்கைதான்  ஆதாரம் என தீர்ப்பு வாசிக்கப் பட்டது !

 

 

  • தருமத்தின் வாழ்வுதனை

சூது கவ்வும்!

சத்ய மேவ ஜயதே

வாய்மையே இறுதியில் வெல்லும்!

*********************************************************************

 

 

News

Read Previous

இருளில் மூழ்கிய பொசுக்குடி மின் பழுது சீரமைப்பில் தொய்வு

Read Next

ஓய்வூதியர் மன்ற கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *