பண்டைய வாசம்

Vinkmag ad
பண்டைய வாசம்
இரா சத்திக்கண்ணன்
—————————————-
பழைய பூட்டுகள் சாவிகள்
உடைந்த கைகடிகாரங்கள்
உழைத்து ஓய்ந்த இஸ்திரிப்பெட்டி
துருப்பிடித்த மண்வெட்டி
கிழிந்த பணத்தாள்
புகைபடிந்த துப்பாக்கி
கீறல்விழுந்த மூக்குக்கண்ணாடி
கரையான் பொந்துடன்
தேக்கு நாற்காலி
பழுப்புநிற பீங்கான் தொட்டி
தட்டித்தட்டி அடிபட்ட
டைப் ரைட்டர்
இன்னும் ஆடிக்கொண்டிருக்கும்
பெண்டுலக் கடிகாரம்
திருகித்திருகி கழன்ற
ரேடியோப்பெட்டி
ஆளுயரப் பித்தளை விளக்கு
யானைக்கால் அளவில்
பெரிய தாம்பாளம்
கிரந்கடித்த
கிராமாபோன் இசைத்தட்டுகள்
பைண்டிங் கலைந்த
உடையும் காகிதப்புத்தகம்
என கடையெங்கும்
இறைந்துகிடக்கும்
பண்டையக் காலப் பொருட்கள்
யாவும்
அழைத்துவந்தன
முன்னோர்களின் முகங்களை!!!
SathiKannan
+971554528136

News

Read Previous

நபிகளார் பிறந்த நாள்

Read Next

பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்குமறுவாழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *