படைத்தோ…னே…

Vinkmag ad

பாடல் : A. முஹம்மது மஃரூஃப்

தொஹையறா:
படைத்தோ…னே… வஹீ …. தந்தா…ன்
ஏ.. கோன் அல்லாஹு என்றுரைத்தா…ன்
நபிமார் வாழ்ந்துவந்த வழியினிலே
நாம் வாழுவதே குர்பானி!

பல்லவி:
ஓ…. லப்பைக்
அல்லாஹ் தந்த தூதர்தான்
அவரும் அவனின் நண்பர்தான்
அல்லாஹ் தந்த தூதர்தான்
அவரும் அவனின் நண்பர்தான்
அண்ணல் நபியும் அவர் வழிதான்
அன்னார் தீனும் இஸ்லாம் தான்
குர்பானி,குர்பானி,குர்பானி
அல்லாஹ்வை நெருங்குவதே குர்பானி!
குர்பானி,குர்பானி,குர்பானி
அல்லாஹ்வை நெருங்குவதே குர்பானி!

சரணம்:1
வாழும் நாயன் ஒருவனே
வாழ வைப்பவன் இறைவனே
வாழும் நாயன் ஒருவனே
வாழ வைப்பவன் இறைவனே
வார்த்தெடுத்த உருவம் யாவும்
வார்த்தை பேசா சிலைகளே, எந்த
வார்த்தை பேசா சிலைகளே
ஓ ….
வானில் தோன்றி மறைவதெல்லாம்
வல்லவன் அவனாய் ஆகிடுமோ
வானில் தோன்றி மறைவதெல்லாம்
வல்லவன் அவனாய் ஆகிடுமோ
மறையும் எதுவும் இறையல்ல
எரியும் நெருப்பும் பொருட்டல்ல
குர்பானி,குர்பானி,குர்பானி
இப்ராஹிம் நபிசெய்த குர்பானி

சரணம்:2
பாலை மணலின் வெளியிலே
சேயும் தாயின் துணையிலே
பாலை மணலின் வெளியிலே
சேயும் தாயின் துணையிலே
ஆணை யிட்டவன் பொறுப்பிலே
துறந்து சென்றார் விரைவிலே, நபி
துறந்து சென்றார் விரைவிலே
ஓ….
தாகம் கொண்டார் பாலகரே
தாயும் நீரைத் தேடினரே
தாகம் கொண்டார் பாலகரே
தாயும் நீரைத் தேடினரே
சஃபா மர்ஆ மலையிடையே
சபஅ முறைதான் ஓடியதே
குர்பானி,குர்பானி,குர்பானி
ஹாஜரன்னை ஓடியதும் குர்பானி

சரணம்:3
இனிய மகனை பலியிட
இறையின் ஆணையும் வந்திட
இனிய மகனை பலியிட
இறையின் ஆணையும் வந்திட
இளவல் கருத்தினை கேட்டிட
இறையின் தூதரும் முனைந்திட, அங்கு
இறையின் தூதரும் முனைந்திட
ஓ …..
இன்ஷா அல்லாஹ் பொறுமையுடன்
இசைவேன் நானும் என்றவுடன்
இன்ஷா அல்லாஹ் பொறுமையுடன்
இசைவேன் நானும் என்றவுடன்
இப்லிஸ் தோற்று ஓடிவிட்டான்
இக்லாஸ் வெற்றி பெற்றது காண்
குர்பானி, குர்பானி, குர்பானி
இஸ்மாயில் பாலகரின் குர்பானி

சரணம்:4
நெருப்பும் பதமாய் குளிர்ந்ததே
சம் சம் பொங்கி வழிந்ததே
நெருப்பும் பதமாய் குளிர்ந்ததே
சம் சம் பொங்கி வழிந்ததே
வாழும் அறுக்க மறுத்ததே
அனைத்தும் அவனைப் பணிந்ததே, அவை
அனைத்தும் அவனைப் பணிந்ததே
ஓ ….
வேதனை கொள்ளும் விஷயமெல்லாம்
சோதனையாக வருவதுண்டு
வேதனை கொள்ளும் விஷயமெல்லாம்
சோதனையாக வருவதுண்டு
சாதனையாய் நாம் மாற்றிடுவோம்
சர்வலோகனை நெருங்கிடுவோம்
குர்பானி குர்பானி குர்பானி
அல்லாஹ்வை நெருங்குவதே குர்பானி!

News

Read Previous

நட்புநாள் வாழ்த்துக்கள்

Read Next

தியாகம் என் கலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *